இது ரஷ்யா மீதான போருக்கு நிகரானது! உலக நாடுகளுக்கு புடின் எச்சரிக்கை
ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிப்பது போர்ப் பிரகடனத்திற்கு நிகரானது என அதிபர் புடின் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது தொடர்ந்து 10வது நாளாக போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இதனால், ரஷ்யாவின் ரூபிள் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிந்துள்ளது. அதுமட்டுமின்றி ரஷ்ய பங்குச்சந்தையும் கடும் சரிவை சந்தித்துள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த புடின், உக்ரைனில் சிறப்பு நடவடிக்கையை தொடங்கிய எளிதாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல, ஆனால் Donbass மோதலுக்கு அமைதியான முறையில் தீர்வு காண ரஷ்யா முயன்றது.
ஆனால், Donbass மக்கள் ரஷ்யா மொழியை சுதந்திரமாக பேசவும், அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வாழவும் உக்ரைன் அனுமதித்திருக்க வேண்டும், ஆனால் அதற்கு பதிலாக உக்ரேனிய அதிகாரிகள் முட்டுக்கட்டையாக இருந்தனர் என புடின் கூறினார்.
மேலும், ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை அமுல்படுத்துவதற்கான நாடுகளின் முடிவு, போர்ப் பிரகடனத்திற்கு நிகரானது.
அதேபோல், யாராவது உக்ரைன் வான்வெளியில் விமாங்கள் பறக்க தடை விதிக்க முயற்சித்தால், அவர்கள் இந்த மோதலில் பங்கேற்பதாக கருதப்படும் என புடின் எச்சரித்துள்ளார்.
அதேசமயம், ரஷ்யாவில் ராணுவ சட்டம் அல்லது அவசர நிலை அறிமுகப்படுத்தப்படாது என புடின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.