ஆணுறைகள்! !ஒலிம்பிக் விளையாட வரும் வீரர்களுக்கு... கொரோனா பரவலை தடுக்க ஜப்பானின் சேம யோசனை
ஜப்பானில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில், வீரர்கள் வெளியில் செல்லும் போது, அவர்களுக்கு ஆணுறைகள் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜப்பானும் ஒன்று, இதனால் அடுத்து கொரோனா அலையில் பாதுகாத்து கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், டோக்கியோவில் வரும் 23-ஆம் திகதி முதல் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், கொரோனா பரவாமல் இருக்க வேண்டும் என்றால், சமூக இடைவெளி மிகவும் முக்கியம், அதை ஊக்குவிக்கும் வகையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியாளர்கள், வீரர்கள் வெளியில் செல்லும்போது ஆணுறைகள் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Beds to be installed in Tokyo Olympic Village will be made of cardboard, this is aimed at avoiding intimacy among athletes
— Paul Chelimo🇺🇸🥈🥉 (@Paulchelimo) July 17, 2021
Beds will be able to withstand the weight of a single person to avoid situations beyond sports.
I see no problem for distance runners,even 4 of us can do😂 pic.twitter.com/J45wlxgtSo
அதுமட்டுமின்றி விளையாட்டு வீரர்கள் உறங்குவதற்கான படுக்கையை பாலியல் எதிர்ப்பு படுக்கையாக வடிவமைத்துள்ளனர், இது விளையாட்டு வீரர்கள் உடலுறவு கொள்வதை தவிர்ப்பதற்கான யோசனை என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பாலியல் எதிர்ப்பு படுக்கைகள் cardboard அட்டைகளை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதால், ஒருநபரின் எடையை மட்டுமே இந்த படுக்கை தாங்கும். இதனால் ஒருவருக்கு மேல் அந்த படுக்கையில் உட்காரவோ, தூங்கவோ முடியாது.
இந்த புகைப்படங்களை எல்லாம் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துக் கொள்வதற்காக டோக்கியோ சென்றிருக்கும் அமெரிக்க ஸ்ப்ரிண்டர் Paul Chelimo, தன்னுடைய டுவிட்டர் பதிவிட்டுள்ளார்.
அதில், டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் இருக்கும் படுக்கைகள் அட்டைப் பெட்டியால் செய்யப்பட்டுள்ளது, இது விளையாட்டு வீரர்களிடையே நெருக்கத்தைத் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.