முகக்கவசம் அணியாமல் திடீரென முற்றுகையிட்ட தடுப்பூசி எதிர்ப்பாளர்கள்! முக்கிய வெகுஜன தடுப்பூசி மையம் மூடல்
அமெரிக்காவில் தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் திடீரென முகக்கவசங்கள் இன்றி முற்றுகையிட்டதால் பாதுகாப்பது காரணங்களுக்காக டோட்ஜர் ஸ்டேடிய தடுப்பூசி மையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் சுமார் 50 எதிர்ப்பாளர்கள் முகக்கவசங்கள் அணியாமல் நுழைவாயிலில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் டோட்ஜர் ஸ்டேடியத்தின் வெகுஜன COVID-19 தடுப்பூசி தளம் சனிக்கிழமை பிற்பகல் தற்காலிகமாக மூடப்பட்டது.
இது பல மணி நேரம் வரிசையில் காத்திருந்த நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகளை விரக்தியடையச் செய்தது.
ஆர்பாட்டத்தின்போது வன்முறை சம்பவம் ஏதும் நடைபெறவில்லை. அவர்கள் தடுப்பூசி போட வந்தவர்களிடம் தடுப்பூசி போடாதீர்கள் என்று கூச்சலிட்டனர்.
ஒரு மணிநேரத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் LAPD அதிகாரிகளால் அகற்றப்பட்டனர், யாரும் கைது செய்யப்படவில்லை.
55 நிமிட முற்றுகை இருந்தபோதிலும், நியமனங்கள் எதுவும் ரத்து செய்யப்படவில்லை, வந்திருந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தபட்டதாக லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் எரிக் கார்செட்டியின் செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரியா கார்சியா கூறினார்.
