இலங்கை பிரச்சனையை கவனிக்கிறேன்! அமைதி திரும்ப... ஐ.நா பொது செயலர் முக்கிய பதிவு
இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே நிலவி வரும் பொருளாதார பிரச்னை காரணமாக விலைவாசி அதிகரிப்பு, எரிபொருள் தட்டுப்பாடு என அன்றாட தேவைகளுக்கே மக்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து நாட்டின் பிரதமர், ஜனாதிபதி விலக மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அதன்படி மகிந்த ராஜபக்ச பதவி விலகினார்.கோத்தாபயவும் நாட்டில் இருந்து வெளியேறினார்.
இதனிடையில் கோட்டாபய ராஜபக்சவின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் ஜனாதிபதி மாளிகையையும் போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். ஜனாதிபதி மாளிகை இப்போது சுற்றுலாத் தலம் போல் மாறியிருக்கிறது.
இந்நிலையில், ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவிக்கையில், நான் இலங்கையில் நிகழும் பிரச்னைகள் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறேன், போரட்டத்தின் காரணம் குறித்தும் போராட்டக்காரகளின் தேவைகள் குறித்தும் ஆராய்ந்து அதனை சரி செய்ய முயல வேண்டும்.
அனைத்து கட்சி தலைவர்களும் சமரசத்துடன் செயல்பட்டு இந்த பிரச்னையை சரி செய்ய வேண்டும் என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
I continue to follow the situation in Sri Lanka very closely. It is important that the root causes of the conflict and protestors’ grievances are addressed. I urge all party leaders to embrace the spirit of compromise for a peaceful and democratic transition.
— António Guterres (@antonioguterres) July 14, 2022