ரஷ்யாவில் தாழ்வான உயரத்தில் பறந்த Antonov-124 விமானம் - அதிர்ச்சியில் மக்கள்
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் ட்ரான் தாக்குதல் நடந்த சூழலில் Antonov-124 விமானம் தாழ்வான உயரத்தில் பறந்தது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
உக்ரேனிய ட்ரோன்கள் மாஸ்கோ நகரை நோக்கி தாக்குதல் நடத்திய நிலையில், உலகின் மிகப்பெரிய சரக்கு விமானங்களில் ஒன்றான ரஷ்யாவின் அன்டோனோவ்-124, Vnukovo விமான நிலையம் நோக்கி மிகவும் தாழ்வான உயரத்தில் பறந்தது.
இந்த விமானம் குடியிருப்பு பகுதிகள் மீது பறந்ததைக் கண்டா மாஸ்கோவின் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உக்ரைனின் kamikaze ட்ரோன்கள் தாக்குதலிலிருந்து தப்பிக்கவே இந்த விமானம் குறைந்த உயரத்தில் பறந்தது.
மாஸ்கோ நகரில் நடந்த இந்த தாக்குதல், போர் தொடங்கியதிலிருந்து மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்ததன்படி, 34 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. Reutov பகுதியில் உள்ள கார் பார்க்கிங் ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டது. இது கிரெம்லினிலிருந்து 9 மைல் தொலைவில் உள்ளது.
Antonov-124 விமானம் 226 அடி நீளமும், 240 அடி இறக்கை விரிவும் கொண்டது. 450 டன் எடையுடன் புறப்படும் இந்த விமானம் 150 டன் சரக்குகளை ஏற்றும் திறன் கொண்டது. உலகில் இவ்வகை விமானம் 57 மட்டுமே உள்ளன.
இந்த தாக்குதலால் மொஸ்கோவின் முக்கிய விமான நிலையமான Sheremetyevo, Kazan மற்றும் Nizhnekamsk விமான நிலையங்களில் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தரையிறங்கவேண்டிய வெளிநாட்டு விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |