32 வயதில் திடீர் மரணம்: இறப்பதற்கு முன் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு வைரல்
உலகெங்கும் சுற்றித்திரிந்து அழகான அற்புதமான சுற்றுலா தளங்களை படம்பிடித்து ரசிகர்களை கவர்ந்து வந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் Anunay Sood, தனது 32 வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பிரபல புகைப்பட கலைஞரும் இன்ஸ்டாகிராம் இன்புளுயன்சருமான Anunay Soodக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.

1.4 மில்லியன் பாலோயர்ஸ் மற்றும் 3 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் கொண்ட இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கூட லாஸ் வேகாசில் இருந்தபடி வீடியோவை வெளியிட்டிருந்தார்.
உலகம் முழுவதும் சுற்றுலா செல்லும் இவரின் வீடியோக்கள் நிச்சயம் டிரெண்டாகிவிடும், ஒரு இடத்தை அழகாக படம்பிடித்து காட்டுவதில் வல்லவர்.
இந்நிலையில் 32 வயதில் இவர் மரணமடைந்துவிட்டதாக Anunay Soodன் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர், இவரது மரணம் ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இவரது மரணத்திற்கான காரணம் குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை, இக்கடினமான நேரத்தில் தங்களுக்கான நேரத்தை வழங்குமாறும், ரசிகர்கள் யாரும் வரவேண்டாம் எனவும் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் விரைவில் லாஸ் வேகாஸ் பொலிசார் Anunay Soodன் மரணத்திற்கான காரணம் குறித்து அறிக்கை வெளியிடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.