சுவிட்சர்லாந்தில் இந்திய பிரபலம் ஒருவரின் பெயரில் ஓடும் ரயில்
சமீபத்தில் சுவிட்சர்லாந்துக்குச் சென்றிருந்த பிரபல இந்திய திரைப்பட நடிகர் ஒருவர், சுவிஸ் ரயில் ஒன்றிற்கு இந்திய பிரபலம் ஒருவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளதைக் கண்டு வியப்பில் ஆழ்ந்துள்ளார்.
இந்திய பிரபலம் ஒருவரின் பெயரில் ஓடும் ரயில்
பிரபல இந்திய நடிகரான அனுபம் கெர், சமீபத்தில் சுவிட்சர்லாந்துக்குச் சென்றுள்ளார்.

அப்போது அவர், சுவிஸ் ரயில் ஒன்றிற்கு இந்திய திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான யாஷ் சோப்ராவின் பெயர் சூட்டப்பட்டுள்ளதைக் கண்டு தனது வியப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
விடயம் என்னவென்றால், யாஷ் சோப்ரா, தனது சில்சிலா, சாந்தினி மற்றும் தில்வாலே துல்ஹானியா லெ ஜாயெங்கே போன்ற திரைப்படங்களில் சுவிட்சர்லாந்தின் அழகைக் காட்டியுள்ள விதத்தால், இந்தியாவில் சுவிஸ் சுற்றுலாவின் அதிகாரப்பூர்வமற்ற தூதராகவே மாறிவிட்டார் எனலாம்.
ஆக, சுவிட்சர்லாந்து மீதான யாஷ் சோப்ராவின் அன்பைக் கண்ட சுவிஸ் அரசு, 2011ஆம் ஆண்டு, அவரை கௌரவிக்கும் வகையில், ரயில் ஒன்றிற்கு ‘Yash Chopra Train’ என பெயர் சூட்டியது.

அதுமட்டுமல்ல, சுவிட்சர்லாந்திலுள்ள Kursaal என்னுமிடத்தில் யாஷ் சோப்ராவுக்கு ஆளுயரச் சிலை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலை அமைந்துள்ள இடம், ஏராளம் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கும் ஒரு சுற்றுலாத்தலமாக மாறிவிட்டது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |