இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர; இந்தியா பற்றிய அவரது நிலைப்பாடு என்ன?
அண்மையில் நடைபெற்ற இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற அனுரகுமார திஸாநாயக்கவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார். பிரதமர் மோடி இலங்கையுடன் நெருக்கமாக பணியாற்ற விருப்பம் தெரிவித்தார்.
அதற்குப் பதிலளித்த திஸாநாயக்க, மோடியின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை தெரிவித்திருந்தார்.
அநுரகுமார திஸாநாயக்க யார்?
தேசிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கும் போட்டியிட்டவரே இந்த அநுரகுமார திஸாநாயக்க ஆவார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ச உட்பட பல முக்கிய அரசியல் பிரமுகர்களை இவருடன் போட்டியிட்டனர்.
55 வயதான அநுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளை பெற்று இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்களால் தேர்வு செய்யப்பட்டார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளையும், பிரேமதாச 4,530,902 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
அதையடுத்து, இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க இன்று காலை பதவி பிரமாணம் செய்துக்கொண்டார்.
2022 இல் கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து அகற்றிய பாரிய போராட்டங்களை அடுத்து, அநுர குமார திஸாநாயக்கவின் வெற்றி மக்களின் விரக்தியின் தெளிவான பிரதிபலிப்பாக பார்க்கப்படுகிறது.
இந்தியா பற்றிய அவரது நிலைப்பாடு என்ன?
அநுர தற்போது பொருளாதார மீட்சி மூலம் நாட்டை வழிநடத்துவது மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்தை நிவர்த்தி செய்வது போன்ற பெரும் சவால்களை எதிர்கொள்கிறார்.
இருப்பினும், அவரது கடந்தகால சீனா சார்பு நிலைப்பாடு இந்தியாவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் கெளதம் அதானியின் 450 மெகாவாட் காற்றாலை மின்சாரத் திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதை ரத்து செய்வது குறித்தும், அது ‘ஊழல்’ என்றும் இலங்கையின் நலன்களுக்கு எதிரானது என்றும் அவர் சமீபத்திய மாதங்களில் பேசியிருந்தார்.
இருந்த போதிலும் திஸாநாயக்க இந்தியாவுடன் நட்புறவு பேணுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். தனது பிரச்சாரத்தின் போது, இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இலங்கையின் பிரதேசம் பயன்படுத்தப்பட மாட்டாது என உறுதியளித்தார்.
பிராந்திய ஸ்திரத்தன்மைக்காக இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் திஸாநாயக்க விருப்பம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |