21% வாக்காளர்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கவில்லை - இலங்கை தேர்தல் ஆணைக்குழு
2024 ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிக்கத் தகுதி பெற்ற 3.5 மில்லியனுக்கும் அதிகமான குடிமக்கள் வாக்களிக்கவில்லை என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
"நான் நாட்டின் ஜனநாயகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டேன்"- ஜனாதிபதியாக நாட்டு மக்களுக்கு முதல் உரை ஆற்றிய அநுர
பதிவு செய்யப்பட்ட 17,140,354 வாக்காளர்களில் மொத்தம் 13,619,916 பேர் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்துள்ளனர், அதாவது 79.46%, 3,520,438 (21.54%) பேர் வாக்களிக்கவில்லை.
இதேவேளை, தோராயமாக 300,300 (2.2%) வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
ரத்நாயக்க மேலும் தெரிவிக்கையில், “வழக்கமாக ஜனாதிபதித் தேர்தல்களில் 80% இற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகும். ஆனால் இம்முறை குறைவான வாக்குகளே பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கு, ஆணையம் தரப்பில் இருந்து மட்டும் சிந்திக்காமல், வாக்கு போடுவதற்காக, ஓட்டுச்சாவடிகளுக்கு மக்களை அழைத்து வருவதில், அரசியல் கட்சிகளின் பங்கு உள்ளது. அதற்குத் தேவையான வசதியை நாங்கள் செய்து தருகிறோம். அதற்காக அரசியல் கட்சிகள் ஏதாவது ஒரு வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |