இலங்கையின் 9-வது ஜனாதிபதியாக அநுர சற்றுமுன் பதவிப் பிரமாணம்
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தற்போது இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார்.
திஸாநாயக்க இன்று காலை கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார்.
புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 21ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.
இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் வாக்கு எண்ணிக்கையின் பின்னர், இலங்கை நாடு புதிய ஜனாதிபதியை - அனுரகுமார திஸாநாயக்கவைத் தேர்ந்தெடுத்துள்ளது.
55 வயதான அவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடனான போட்டியை முறியடித்தார், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மூன்றாவது இடத்தில் பின்தங்கினார்.
திஸாநாயக்க 5,740,179 வாக்குகளையும், பிரேமதாச 4,530,902 வாக்குகளையும் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.
அதையடுத்து, தற்போது இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க பதவி பிரமாணம் செய்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |