விராட் கோலிக்கு Flying Kiss கொடுத்த அனுஷ்கா சர்மா- வைரலாகும் வீடியோ
விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவின் காதலானது அவர்களின் ரசிகர்களால் அதிகமாக வரவேற்கப்படுகிறது.
சமீபத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியின் போது, விராட் சதம் அடித்து தனது அன்பு மனைவியை பெருமைப்படுத்தியுள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் RCB மற்றும் GT ஆகிய அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய RCB 20 ஓவர் முடிவில் 197 ஓட்டங்களை எடுத்தது. மேலும் அணி தலைவரான விராட் கோலி சதம் அடித்து அசத்தினார்.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக சதம் அடித்த கிறிஸ் கெயில் சாதனையை இதன் மூலம் விராட் கோலி முறியடித்தார்.
அனுஷ்கா சர்மாவின் முத்தம்
இவ்வாறு அடுத்தடுத்து சதம் அடித்து அசத்திய விராட் கோலிக்கு Flying kiss கொடுத்துள்ளார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Anushka Sharma fly kissing?pic.twitter.com/Zn57SAhyrX
— Daddyscore (@daddyscore) May 21, 2023
மேலும் ஐபிஎல் தொடரில் இருந்து ஆர்சிபி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.