18 லட்சம் கடனிலிருந்த உணவகம்; அனுஷ்கா சர்மாவின் ஒரு ஆர்டரால் மாதம் ரூ.2 கோடி வருமானம்
anushka sharma chole bhature order changed eatery 18 lakh debt to 2cr income: ரூ.18 லட்சம் கடனிலிருந்த உணவகம் ஒன்று, அனுஷ்கா சர்மாவின் ஒரு ஆர்டரால் மாதம் ரூ.2 கோடி வருமானம் ஈட்டி வருகிறது.
ரூ.18 லட்சம் கடனிலிருந்த உணவகம்
சகோதரர்களான ஜஸ்பால் சிங் கல்சா மற்றும் மஹிந்தர் சிங் கல்சா ஆகிய இருவரும் மும்பையில், அக்டோபர் 2021 ஆம் ஆண்டில் delhi se என்ற உணவகத்தை தொடங்கினர்.

3 மேசை, 9 இறக்கைகளுடன் 250 சதுர அடி பரப்பளவில் இந்த உணவகம் அமைந்திருந்தது.
ஆனால், 2022 ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து விற்பனை சரிய தொடங்கியதால் செப்டம்பர் மாதத்தில் உணவகத்தை மூடுவது குறித்து சகோதர்கள் சிந்தித்துள்ளனர்.
அனுஷ்கா சர்மாவின் ஆர்டர்
அந்த நேரத்தில் ஒருநாள் உணவகத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பில் விராட் கோலி இல்லத்திலிருந்து பேசுவதாக அழைத்துள்ளனர்.
அந்த அழைப்பில், ஜூஹூ விற்கு 2 தட்டு சோலே பத்தூரே வேண்டுமென கேட்டுள்ளனர். ஆனால், அந்த அழைப்பு கேலி என சகோதரர்கள் சந்தேகமடைந்துள்ளனர்.

ஒரு தட்டின் விலை 120 ரூபாய். ஆனால், செம்பூரிலிருந்து ஜூஹூ சென்று திரும்புவதற்கான பயணச் செலவு, ஆர்டர் தொகையை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அழைத்தவர், கூடுதல் விநியோகச் செலவை ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்து, பணம் செலுத்துவதற்காக அவரது வங்கி விவரங்களைக் கேட்டதால் இது மோசடி எனவும், வங்கி கணக்கை ஹேக் செய்து விடுவார்கள் எனவும் சந்தேகமடைந்தனர்.
கணக்கில் ஏற்கனவே பற்றாக்குறையாகத்தான் இருக்கிறது. அதில் கிட்டத்தட்ட பணமே இல்லை என்பது அவர்களுக்கு நினைவு வந்துள்ளது.
விராட் கோலியின் வீட்டிலிருந்து பேசுகிறோம் என கூறிய போது, "விராட் கோலி எங்கே இருக்கிறார், நான் எங்கே இருக்கிறேன். செம்பூரில் உள்ள ஒரு சிறிய சோலே பத்தூரே கடையில்? நீங்கள் விராட் கோலியின் வீட்டிலிருந்து பேசுகிறீர்கள் என்பதை நான் எப்படி நம்புவது? என கேட்டுள்ளார்.
"நீங்கள் எங்களை நம்ப வேண்டும், இல்லையெனில் இந்த வாய்ப்பை இழந்துவிடுவீர்கள்” என பதிலளித்துள்ளார். அன்று, அதாவது 2022 அக்டோபர் 5 ஆம் தேதி டெலிவரி செய்யப்பட்டது.
அதன் பின்னர் சிறிது நேரத்தில் அந்த கடையின் பெயருடன், “இந்தத் தேடல் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், எனது பேரானந்தத்தையும் வெளிப்படுத்திவிட்டேன்.

அவரை அறிந்தவர்களுக்கு சோலே பத்தூரே மீது அவருக்கு இருக்கும் பிரியம் தெரியும். அந்த ஒரு ‘சீட் மீல்’ விஷயத்தில் எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லை,” என அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் ;பக்கத்தில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார்.
மாதம் ரூ.2 கோடி வருமானம் அடுத்த அரை மணி நேரத்திற்குள், கடை முன்பு பெரியளவில் கூட்டம் கூடியது. கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் வந்தனர். தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் ஒலிக்க தொடங்கியது.
வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் 6 அல்லது 6 தட்டுகள் வரை ஆர்டர் செய்ததால், உணவகத்தில் தேவையான பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. 2 தட்டு சோலே பத்தூரே பெறுவதற்காகவே 2 மணி நேரத்திற்கும் மேலாக சிலர் காத்திருந்தனர்.
அதன்பிறகு, டெல்லி சே நிறுவனம் செம்பூர், முலுந்த், அந்தேரி மேற்கு மற்றும் வாஷி ஆகிய இடங்களில் 4 கிளைகளாக விரிவடைந்துள்ளது.
தற்போது விற்பனை நிலையங்கள் மூலம் தினமும் 3,000 தட்டுகளுக்கும் அதிகமான சோலே பத்தூரேவை விற்பனை செய்கிறது. முன்பு அரை கிலோ சோலேயை ஊறவைத்து வந்தனர்,
ஆனால் இப்போது தினமும் சுமார் 125 கிலோ சோலேயை ஊறவைக்கிறார்கள், இது சமைத்த பிறகு கிட்டத்தட்ட ஒரு டன்னாக விரிவடைகிறது. மேலும், மாத வருமானம் ரூ.2 கோடியாக உயர்ந்துள்ளது.