ட்ராவிட் மகனின் அதிரடி ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய U19 அணி
anvay dravid strikes india u19 beat australia u19: ட்ராவிட் மகனின் அதிரடி ஆட்டத்தில் இந்திய U19 அணி அவுஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளது.
ட்ராவிட் மகனின் அதிரடி ஆட்டம்
3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக, அவுஸ்திரேலியா U19 அணி இந்தியாவிற்கு வருகை தந்துள்ளது.
நேற்று ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் தொடங்கிய அதிகாரப்பூர்வமற்ற முதல் ODI போட்டி, மழை காரணமாக 20 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பாட்டம் ஆடிய இந்திய U19 அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்கள் குவித்துள்ளது.
அதிகபட்சமாக, இந்திய அணி தரப்பில் யாஷ்பர்தன் சவுகான் 54 ஓட்டங்கள் குவித்தார்.
இதே போல் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர்களான விரேந்திர சேவாக் மற்றும் ராகுல் ட்ராவிட்டின் மகன்கள் இடம் பெற்றிருந்தனர்.
சேவாக்கின் மகன் ஆர்யவிர் சேவாக், 26 பந்துகளில் 5 பவுண்டரிகள் உட்பட 28 ஓட்டங்கள் குவித்தார்.
ராகுல் ட்ராவிட்டின் மகன் அன்வே டிராவிட், தனது தந்தையை போல் நிதானமாக ஆடாமல் அதிரடியாக ஆடி, 18 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட 38 ஓட்டங்கள் குவித்தார்.

183 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலியா U19 அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
இதன் மூலம், இந்திய U19 அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தனது மகன் விளையாடும் முதல் போட்டியை நேரில் காண ராஜ்கோட் நிரஞ்சன் ஷா மைதானத்திற்கு விரேந்திர சேவாக் வருகை தந்திருந்தார்.