எவரேனும் எங்களைத் தாக்கினால்... கடுமையான எச்சரிக்கை விடுத்த நெதன்யாகு
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹவுதிகளுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்தார்.
நெதன்யாகு மிரட்டல்
யூத தேசத்தின் மீது தாக்குதல்களைத் தொடங்கத் துணிந்தால், இஸ்ரேல் எதிரி இடங்களைத் தொடர்ந்து தாக்கும் என நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை இரவு இஸ்ரேலிய விமானப்படை ஹவுதிகளின் பயங்கரவாத மையங்களை குண்டுவீசித் தாக்கியதைத் தொடர்ந்து நெதன்யாகு மிரட்டல் விடுத்திருந்தார். ஹவுதி இலக்குகளுக்கு எதிரான விமானப்படை நடவடிக்கை குறித்துப் பேசுகையில்,
இஸ்ரேல் தொடர்ந்து தாக்கும். இஸ்ரேலை அடிப்பவர் யாராக இருந்தாலும், நம்மைத் தாக்குபவர் யாராக இருந்தாலும் - நாங்கள் அவர்களை அடைவோம் என நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
2023 அக்டோபரில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் வெடித்ததிலிருந்து, 2,350 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தைக் கடந்து இந்த தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய விமானப்படை தெரிவித்துள்ளது.
இராணுவம் உறுதியாக
பத்துக்கும் மேற்பட்ட போர் விமானங்களின் ஒரு குழு இந்த தாக்குதலில் பங்கேற்றது, மேலும் பதினைந்து தனித்தனி இலக்குகளுக்கு எதிராக முப்பதுக்கும் மேற்பட்ட தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டது என்றும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
தாக்குதலை முடிக்க போர் விமானங்களுக்கு பல முறை நடுவானில் எரிபொருள் நிரப்பும் நடவடிக்கைகள் தேவைப்பட்டன. இஸ்ரேல் அரசின் பொதுமக்களுக்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலையும், தேவைப்படும் இடங்களில் தொடர்ந்து அகற்றுவதில் இராணுவம் உறுதியாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் சனாவில் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள நிர்வாகத்தின் பிரதமர் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்ட கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |