பாலஸ்தீனக் கொடியுடன் எவரும்... பூமியில் வாழ தகுதியற்றவர்கள்: இஸ்ரேல் அமைச்சரின் மிரட்டல்
பாலஸ்தீனக் கொடியை ஏந்தும் எவரும் பூமியில் இனி வாழ தகுதியற்றவர்கள் என இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளார்.
மொத்தமாக அழிக்க வேண்டும்
இஸ்ரேலிய அமைச்சரான Amichai Eliyahu தீவிர யூத கோட்பாடுகளை பின்பற்றும் Otzma Yehudit கட்சியின் உறுப்பினராவார். இவரே வட பகுதியை மொத்தமாக அழிக்க வேண்டும் என்ற கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், எவரொருவர் பாலஸ்தீனம் அல்லது ஹமாஸ் கொடியை ஏந்துகிறார்களோ அவர்கள் பூமியில் வாழத் தகுதியற்றவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். காஸா பகுதிக்கு மனிதாபிமான உதவிகள் மேற்கொள்வதை கடுமையாக எதிர்த்துள்ள அவர்,
நாஜிகளுக்கு மனிதாபிமான உதவிகள் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார். மட்டுமின்றி, ஹமாஸ் படைகளுடன் தொடர்பில்லாத அப்பாவி மக்கள் என எவரும் காஸா பகுதியில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
@epa
காஸா பகுதியில் இருந்து இனி பிரச்சனைகள் எழாமல் இருக்க ஒரே தீர்வு, அப்பகுதியில் அணுகுண்டு வீசுவதே எனவும் அமைச்சர் Amichai Eliyahu கருத்து தெரிவித்திருந்தார்.
குடியிருக்கும் காட்டுமிராண்டிகள்
இவரது கருத்துக்கு உலக நாடுகள் பல கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இவர் மீது நடவடிக்கை எடுத்ததாக கூறப்பட்டது. மேலும், காஸா பகுதியில் இஸ்ரேல் மக்களை குடியமர்த்துவதை ஆதரித்துள்ள இவர், சட்டவிரோத குடியமர்த்தலையும் ஊக்குவித்தார்.
பாலஸ்தீன மக்கள் இங்கிருந்து ஏதேனும் பாலைவனத்திற்கோ அல்லது அயர்லாந்துக்கோ செல்லட்டும், காஸாவில் குடியிருக்கும் காட்டுமிராண்டிகள் தாங்களாகவே தீர்வு காண வேண்டும் எனவும் எனவும் கொந்தளித்துள்ளார்.
@reuters
ஆனால், ஹமாஸ் படைகளுக்கு எதிரான தற்போதைய போர் தொடர்பில் முடிவுகள் எடுக்கும் அமைச்சர்கள் குழுவில் Amichai Eliyahu இடம்பெறவில்லை என்றே கூறப்படுகிறது.
பாலஸ்தீன தேசியக் கொடி ஏந்தியவர்களை கொல்ல வேண்டும் என மறைமுகமாக வலியுறுத்திய அமைச்சர் Amichai Eliyahu-வின் கருத்துக்கு கடும் கண்டனம் மற்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |