உலகம் ஒரு ஹீரோவை இழந்துவிட்டது! முதல் விண்வெளி பயணத்தின் கடைசி வீரர் மரணம்
விண்வெளிக்கு சென்று வந்த அமெரிக்க விண்வெளி வீரர் வால்டர் கன்னிங்ஹாம் தனது 90வது வயதில் உயிரிழந்தார்.
முதல் விண்வெளி பயணம்
நாசாவின் 'அப்பல்லோ 7' என்ற விண்கலம் 1968ஆம் ஆண்டு முதல் முறையாக விண்வெளிக்கு மனிதர்களை வெற்றிகரமாக அனுப்பியது.
அதில் டான் எப் ஐசெல், வால்டர் எம். ஷிரா மற்றும் வால்டர் கன்னிங்ஹாம் ஆகிய மூன்று வீரர்கள் பயணித்தனர். அவர்கள் 11 நாட்கள் விண்வெளியை சுற்றி வந்தனர். இந்த விண்வெளி பயணமானது தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
@HUM Images/Universal Images Group via Getty Images
90 வயதில் மரணம்
டான் எப் ஐசெல், வால்டர் எம். ஷிரா ஆகிய இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டனர். இந்த நிலையில் மூன்றாவது நபரான கன்னிங்ஹாம் உடல்நலக்குறைவு காரணமாக தனது 90வது வயதில் நேற்று மரணமடைந்தார்.
@DAVID BECKER/GETTY
அமெரிக்க கடற்படையில் பணியாற்றிய கன்னிங்ஹாம், சிறப்புப் படையிலும் விமானியாக பணியாற்றியுள்ளார். 1963ஆம் ஆண்டு நாசாவின் விண்வெளி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்ட கன்னிங்ஹாம், போர் விமானியாக 54 பயணங்களை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிக்கை ஒன்றில் கன்னிங்ஹாமின் குடும்பத்தினர், 'உலகம் மற்றொரு உண்மையான ஹீரோவை இழந்துவிட்டது. நாங்கள் அவரை மிகவும் தவறவிடுவோம்' என தெரிவித்துள்ளனர்.
@Al Finn/Getty Images