அப்போலோ மருத்துவமனைகள் நிர்வாகத்தை ஆளும் பெண்மணி.. எத்தனை கோடிகள் புரளுகிறது தெரியுமா?
அப்போலோ மருத்துவமனைகளின் நிர்வாகத்தை கட்டி ஆளுங்கின்ற பெண்ணை பற்றி தான் பார்க்க போகிறோம்.
தனது கடின உழைப்பினாலும், விடா முயற்சியினாலும் சிலர் மிகப்பெரிய இடத்திற்கு செல்வார்கள். இன்னும் சிலர், தனது குடும்பத்தில் உள்ளவர் பெரிய நிறுவனத்தை நடத்தி வந்தால் அவர்களுக்கு பிறகு அதனை நிர்வகித்து வருவதன் மூலம் சிலர் பிரபலமடைகின்றனர். அப்படி பட்ட ஒருவர் தான் சுனீதா ரெட்டி.
யார் இந்த சுனீதா ரெட்டி?
அப்போலோ மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குநராக சுனீதா ரெட்டி உள்ளார். இவர் தனது தந்தையின் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது தந்தை கார்டியாலஜிஸ்ட்டுமான பிரதாப் ரெட்டி 1983 -ம் ஆண்டில் Apollo Hospitals Enterprises நிறுவனத்தை தொடங்கினார்.
அமெரிக்காவில் பணியாற்றிவிட்டு வந்த பிரதாப் ரெட்டி இந்த நிறுவனத்தை தொடங்கினார். போர்ப்ஸ் கணிப்பின்படி 2024 ஜனவரி 1 -ம் திகதியின் படி அவரது நிகர சொத்து மதிப்பு ரூ.23,300 கோடியாகும்.
1989 -ம் ஆண்டு முதல் சுனீதா ரெட்டி அப்போலோ மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவரது தலைமையின் கீழ் அப்போலோ மருத்துவமனை ஒருங்கிணைந்த ஹெல்த்கேரில் முன்னோடியாக திகழ்கிறது.
சுனீதா ரெட்டி, சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் இளங்கலை பப்ளிக் ரிலேஷன்ஸ், எக்கனாமிக்ஸ், மார்க்கெட்டிங் பட்டப்படிப்பையும், பைனான்சியல் இன்ஸ்டிட்டியூட் ஆப் பைனான்சியல் மேனேஜ்மெண்ட் அண்டு ரிசர்ச் நிறுவனத்தில் பைனான்சியல் மேனேஜ்மெண்ட்டில் டிப்ளமோவும் படித்துள்ளார்.
மேலும், சேஜ் பல்கலைக்கழகத்தில் லைப் சயின்ஸ் பாடத்தில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். சுனீதா ரெட்டி எப்போதுமே ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைப்பதால் டயட்டை பின்பற்றி வருகிறார். CII Healthcare கவுன்சிலின் தலைவராக Suneeta Reddy உள்ளார்.
மேலும், Harvard Business School-ன் இந்திய ஆலோசனை வாரியத்திலும் Harvard Medical School அட்வைசரி போர்டிலும் உறுப்பினராக உள்ளார். இதனிடையே, அப்போலோ மருத்துவமனைகளின் சந்தை மதிப்பு மட்டும் ரூ.82492 கோடியாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |