ரஜினிக்கு ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளது! டிஸ்சார்ஜ் குறித்து முடிவு எப்போது? அப்பல்லோ மருத்துவமனை புதிய அறிக்கை
நடிகர் ரஜினிகாந்தை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும் என ஐதராபாத் அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ரத்த அழுத்த மாறுபாடு மற்றும் சோர்வு காரணமாக ரஜினி மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளதாக அப்பல்லோ சார்பில் நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் சற்றுமுன்னர் அப்பல்லோ மருத்துவமனை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ரஜினிகாந்தின் ரத்த அழுத்தம் தற்போதும் அதிகமாகவே உள்ளது.
அதே சூழலில் நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவரை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
