3 புதிய Apple தயாரிப்புகள் அறிமுகம்!
2021 இறுதிக்குள் ஆப்பிள் நிறுவனம் 3 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் 2021- ஆம் ஆண்டுக்கான உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டை (Worldwide Developers Conference) கொரோனா பெருந்தொற்று காரணமாக ஜூன் 7-ஆம் திகதி முதல் 11-ஆம் திகதி வரை ஓன்லைனில் நடத்தியது.
இந்த மாநாட்டில் குறிப்பிட்ட சீலம் மட்டுமே கலந்துண்டனர், மேலும் புதிய பொருட்கள் ஏதும் அறுமுகப்படுத்தவில்லை. அதில், iOS 15, iPadOS 15, watchOS 8, tvOS 15, macOS Monterey மற்றும் சில மென்பொருள் புதுப்பிப்புகள் (software updates) மட்டுமே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையியில், 2021-ன் நான்காம் காலாண்டில் 2 புதிய MacBook மொடல்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், புதிய Processor-உடன் ஒரு புதிய Mac mini-யும் அறிமுகப்படுத்தக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல்களின் படி, அவை 14 இன்ச் மற்றும் 16 இன்ச் MacBook Pro வகை மடிக்கணினிகள் என்று தெரிகிறது. மேலும் Mac mini புதிதாக M1X என்ற Processor-உடன் வெளிவரலாம் என கூறப்படுகிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.