இந்தியாவின் புதிய விதி... ரூ 3 லட்சம் கோடி அபராதம் செலுத்தும் நெருக்கடியில் ஆப்பிள்
இந்தியாவின் புதிய நம்பிக்கைக்கு எதிரான தண்டனைச் சட்டத்திற்கு எதிராக அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் நீதிமன்றத்தை நாடியுள்ளது.
இதுவே முதல் முறை
இந்த வழக்கில், ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்டால், அந்த நிறுவனம் இந்தியாவிற்கு 38 பில்லியன் அமெரிக்க டொலர் அதாவது ரூ 339,000 கோடி அபராதமாக செலுத்த நேரிடும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் புதிய நம்பிக்கைக்கு எதிரான தண்டனைச் சட்டத்திற்கு எதிராக ஒரு நிறுவனம் நீதிமன்றத்தை நாடுவது இதுவே முதல் முறை. நிறுவனங்கள் தங்கள் சந்தை ஆதிக்கத்தை துஷ்பிரயோகம் செய்வதற்காக விதிக்கும் அபராதங்களைக் கணக்கிடும்போது, உலகளாவிய வருவாயைக் கணக்கில் எடுத்துக்கொள்ள இந்திய போட்டி ஆணையத்திற்கு (CCI) குறித்த சட்டம் அனுமதிக்கிறது.
கடந்த 2022 முதலே, டிண்டர் உரிமையாளர் மேட்ச் குழுமம் மற்றும் இந்திய ஸ்டார்ட்அப்கள் ஆப்பிள் நிறுவனத்துடன் CCI-ல் நம்பிக்கைக்கு எதிரான தண்டனைச் சட்டம் தொடர்பில் மல்லுக்கட்டி வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், ஆப்பிள் நிறுவனம் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டது அம்பலமானது. ஆனால், தம் மீதான குற்றச்சாட்டுகளை ஆப்பிள் நிறுவனம் மறுத்தது.
உலகளாவிய வருவாயை
இந்த விவகாரத்தில் அபராதம் உட்பட, இறுதி முடிவை CCI இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில், CCI உலகளாவிய வருவாயைப் பயன்படுத்த அனுமதித்த 2024 சட்டத்தை சட்டவிரோதமானது என்று அறிவிக்குமாறு ஆப்பிள் நிறுவனம் நீதிபதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்திற்கான அபராதம் என்பது 2024 வரையான மூன்று நிதியாண்டுகளில் அதன் உலகளாவிய சராசரி வருவாயில் 10 சதவீதமாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. இதனால், ஆப்பிள் நிறுவனம் 38 பில்லியன் அமெரிக்க டொலர் அதாவது ரூ 339,000 கோடி அபராதமாக செலுத்த நேரிடும்.
இதனையடுத்து, உலகளாவிய வருவாயை அடிப்படையாகக் கொண்ட அத்தகைய அபராதம் என்பது வெளிப்படையாக தன்னிச்சையானது, அரசியலமைப்பிற்கு விரோதமானது, அநியாயமானது என ஆப்பிள் நிறுவனம் முறையிட்டுள்ளது.
நம்பிக்கைக்கு எதிரான தண்டனைச் சட்டத்தின் அடிப்படையில், நிறுவனங்கள் அதன் உலகளாவிய வருவாயில் 10 சதவீதம் அபராதம் செலுத்த வேண்டும் என்பது ஐரோப்பிய ஒன்றியத்திலும் அமுலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |