சீனாவை சீண்ட வேண்டாம்... ஜப்பான் பிரதமருக்கு ட்ரம்ப் அறிவுரை
சீனாவுடனான மோதல் போக்கு மேலும் அதிகரிப்பதைத் தவிர்க்குமாறு ஜப்பானியப் பிரதமர் சானே தகைச்சியிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார்.
கோபப்படுத்த வேண்டாம்
இந்த வாரம் இரு தலைவர்களும் தொலைபேசியில் தொடர்புகொண்டு விவாதித்த நிலையிலேயே, ஜப்பான் பிரதமருக்கு ட்ரம்ப் அறிவுரை வழங்கியுள்ளார்.

உக்ரைன் விவகாரத்திலும், பாதிக்கப்பட்ட அந்த நாட்டு மக்களுக்கு ஆதரவாக இல்லாமல், படையெடுப்பை நடத்திய ரஷ்யாவிற்கு ஆதரவாகவே ட்ரம்ப் இதுவரை நடந்துகொண்டுள்ளார்.
தற்போதும் தைவான் விவகாரத்தில் சீனாவை சீண்ட வேண்டாம் என ஜப்பானைக் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மாத தொடக்கத்தில் தைவான் தொடர்பில் ஜப்பான் நாடாளுமன்றத்தில் பிரதமர் சானே தகைச்சி பதிவு செய்த கருத்து,
பல ஆண்டுகளில் சீனாவுடன் மிகப்பெரிய தூதரக மோதலுக்கு காரணமாக அமைந்தது. தைவான் மீதான சீனாவின் சட்டத்திற்கு புறம்பான தாக்குதல் எண்ணம் ஜப்பானிய இராணுவ நடவடிக்கையைத் தூண்டக்கூடும் என்று தகைச்சி கூறியிருந்தார்.
இது சீனா நிர்வாகத்தை கோபம் கொள்ள வைத்ததுடன், அந்தக் கருத்தை தகைச்சி திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

ஆனால், ஜப்பானின் நிலைப்பாடு அது என்றே தகைச்சி நிர்வாகம் இதுவரை கூறி வருகிறது. இந்த நிலையில், செவ்வாயன்று ட்ரம்புடனான தொலைபேசி அழைப்பில், சீனாவை மேலும் கோபப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி தகைச்சிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
சீனாவுடன் இணைப்பது
சீனா உடன் ஒரு முக்கிய வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுக்க விரும்பும் ட்ரம்ப், ரஷ்ய எண்ணெய் விவகாரத்திலும், இந்தியாவை 25 சதவீத வரிகளால் தண்டித்த நிலையில், சீனாவை எண்ணெய் இறக்குமதி விவகாரத்தில் கண்டுகொள்ளவில்லை.
தற்போது தைவான் தொடர்பில் சீனாவை கோபப்படுத்த வேண்டாம் என்றே ஜப்பானைக் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன், இந்த விடயத்தில் தகைச்சியிடம் அவர் எந்த குறிப்பிட்ட கோரிக்கைகளையும் வைக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

ஆனால், ட்ரம்புடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட சீன ஜனாதிபதி தைவானை சீனாவுடன் இணைப்பது என்பது உலக ஒழுங்கிற்கான சீனாவின் தொலைநோக்குப் பார்வையின் ஒரு முக்கிய பகுதி என தெரிவித்துள்ளார்.
சீனாவின் தொடர்ச்சியான நெருக்கடியை தைவான் புறக்கணித்து வருவதுடன், நாட்டின் 23 மில்லியன் மக்களின் விருப்பம் அதுவல்ல என்றும் பதிலளித்து வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |