Apple Card: இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய திட்டம்
இந்தியாவில் தங்களது கிரெடிட் கார்டை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்பிள் கார்டு என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் இச்சேவைக்கான முதல்கட்ட பணிகளை நிறுவனம் தொடங்கியுள்ளதாக தெரிகிறது.
இதற்காக இந்திய வங்கிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாம்.
இதுதவிர ஆப்பிள் பே என்ற சேவையை தொடங்குவதற்காகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இது கிரெடிட் கார்டு தொடர்பான பேச்சுவார்த்தையா அல்லது UBI சார்த்த பரிவர்த்தனைக்கானதா என்பது குறித்து தகவல்கள் ஏதுமில்லை.
கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா வந்திருந்த ஆப்பிள் சிஇஓ டிக் குக் HDFC வங்கி தலைமை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |