அமெரிக்காவில் TikTok நீக்கம்: Apple, Google-ன் அதிரடி நடவடிக்கை
அமெரிக்காவில் Apple மற்றும் Google நிறுவனங்கள் TikTok செயலியை அதிரடியாக நீக்கியுள்ளன.
அமெரிக்க அரசு அமுல்படுத்திய சட்டத்தின் அடிப்படையில், Apple மற்றும் Google தங்களின் App Store-களிலிருந்து TikTok-ஐ நீக்கியுள்ளன.
தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்வதற்காக அமெரிக்க அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்ட இச்சட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைமுறைக்கு வந்தது.
சட்டத்தின் பின்னணி
2023 ஏப்ரல் மாதத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்பமிட்ட இந்த சட்டம், TikTok நிறுவனமான ByteDance-ஐ அதன் அமெரிக்க வியாபாரத்தை விற்பனை செய்ய வலியுறுத்தியது.
இதை ByteDance மறுத்ததால், TikTok-ஐ அமெரிக்காவில் செயல்படுத்துவதை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
TikTok, தனது அமெரிக்க பயனர்களுக்கான சேவைகளை தற்காலிகமாக நிறுத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு, Apple மற்றும் Google தங்களின் App Store-களிலிருந்து TikTok-ஐ மற்றும் CapCut, Lemon8, Lark போன்ற ByteDance செயலிகளையும் நீக்கின.
சர்ச்சை மற்றும் அபராதம்
இந்தச் சட்டத்தின் படி, TikTok-ஐ வெளியிடும் நிறுவனங்கள், செயலிகளை பராமரிக்க அல்லது புதுப்பிக்க தடைசெய்யப்படுகின்றன.
விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு, $5,000 பல மடங்காக அபராதமாக விதிக்கப்படும். TikTok அமெரிக்காவில் 170 மில்லியன் மாதாந்திர பயனர்களை கொண்டுள்ளதால், இந்த அபராதம் பெருமளவுக்கு உயரக்கூடும்.
90 நாட்கள் அவகாசம்
தற்போது அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், ByteDance நிறுவனத்துக்கு 90 நாட்கள் அவகாசம் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகள் TikTok பயனர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |