ஆப்பிளின் iCloud கட்டணம் அதிரடி உயர்வு! விலை பட்டியல் இதோ
ஆப்பிள் நிறுவனம் அதன் iCloud சேவைக்கான கட்டணத்தை பல நாடுகளில் அதிரடியாக உயர்த்தியுள்ளது.
iCloud கட்டணம் அதிரடி உயர்வு
ஆப்பிள் பயனர்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய சேவைகளில் ஒன்றாக iCloud உள்ளது. iCloud Storage சேவையில் பயனர்கள் 5GB வரையிலான டேட்டாவை இலவசமாக பயன்படுத்த முடியும். இதை கடந்து அதிக ஸ்டோரேஜ் வேண்டுமெனில் பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்த நிலையில், பிரித்தானியா மற்றும் சில நாடுகளில் iCloud சேவையின் விலையை ஆப்பிள் அதிகரித்துள்ளது.
25% உயர்வு
பிரித்தானிய ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்கு iCloud Storage-ன் மாதாந்திர கட்டணத்தின் விலை சுமார் 25% அதிகரித்துள்ளது.
அதாவது, 50 GB-க்கு மாதம் 0.79 பவுண்டு, 200 GB-க்கு மாதம் 2.49 பவுண்டுகள் மற்றும் 2 TB-க்கு மாதம் 6.99 பவுண்டுகள் என வசூலிக்கப்பட்ட நிலையில், இப்போது இந்த விலைகள் 0.99 பவுண்டு, 2.99 பவுண்டுகள் மற்றும் 8.99 பவுண்டுகள் என அதிகரித்துள்ளன.
Apple
மற்ற நாடுகள்
இதேபோல், போலந்து, ருமேனியா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, ஸ்வீடன், தான்சானியா, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை, வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்களில் சமீபத்திய மாற்றங்கள் தான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
தற்போதைக்கு இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஐகிளவுட் சேவைக்கான கட்டணத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
Apple iCloud, iCloud Plans, iCloud Price, icloud price in UK
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |