உணவு பஞ்சத்தில் பிரித்தானியா! பசி பட்டினியால் மக்கள் பாதிப்பு - அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை
பிரித்தானியாவில் உணவு பஞ்சம் தலைதூக்கியுள்ள நிலையில், அங்கு மக்கள் பசி பட்டினியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பசி பட்டினியில் பிரித்தானிய மக்கள்
பிரித்தானியா வரலாறு காணாத உணவு பஞ்சத்தை எதிர்கொண்டு வருவதால், நாட்டின் லட்சக்கணக்கான மக்களுக்கு பசியுடன் இருப்பது என்பது இயல்பானதாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியா தற்போது கடும் பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கிறது. அந்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் உணவின்றி பட்டினியில் வாடி வருகின்றனர்.
14 சதவீத மக்கள் உணவு பஞ்சத்தால் பாதிப்பு
இந்த நிலையில், சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி ஆய்வுகள் நிறுவனம் (IDS) நடத்திய ஆய்வில், 14 சதவீத பிரித்தானிய மக்கள் உணவு பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், இந்த பட்டினி கொடுமை தற்போது பிரித்தானியர்களுக்கு இயல்பான ஒன்றாக மாறிவிட்டதாக ஆய்வு கூறுகிறது.
பிரித்தானியாவில் உணவு பெறுவதில் மக்களிடையே சமத்துவம் இன்மை மிக அதிகம் உள்ளதாகவும், தொண்டு நிறுவனங்கள் இதை சரிசெய்ய 10 ஆண்டுகளாக முயற்சித்தும் இதற்கு தீர்வு கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
Getty Images
10 ஆண்டுகளுக்கு முன் 100 உணவு வங்கிகள் மட்டுமே சேவை செய்த நிலையில், 2021-ல் இந்த எண்ணிக்கை 2,000-ஆக அதிகரித்தது. 2022 செப்டம்பர் புள்ளிவிவரப்படி 97 லட்சம் மக்கள் உணவு பஞ்சத்திற்கு ஆளாகியுள்ளதாக ஆய்வு கூறுகிறது.
7 பேரில் ஒருவர் பட்டினி
இதற்கு மத்தியில், அதிர்ச்சியூட்டும் விதமாக டிரசல் டிர்ஸ்ட் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், பிரித்தானியாவில் 7 பேரில் ஒருவர் பட்டினிக்கு ஆளாவதாக தெரியவந்துள்ளது.
ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 7 சதவீதம் பேர் தொண்டு அமைப்புகளையே உணவுக்காக சர்ந்து இருப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
United Kingdom, UK Food Crisis, UK hunger crisis,
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |