இந்த iPhone மொடலில் Camera கோளாறு., இலவச சர்வீஸ் வழங்கும் Apple நிறுவனம்
ஆப்பிள் (Apple) நிறுவனம் தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக iPhone 14 Plus மொடல்களை திரும்பபி பெறுவதாக அறிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த ரீகால் 10 ஏப்ரல் 2023 முதல் 28 ஏப்ரல் 2024 வரை விற்கப்பட்ட iPhone 14 Plus ஸ்மார்ட்போன்களை உள்ளடக்கியது.
இருப்பினும், பாதிக்கப்பட்ட மொடல்களின் எண்ணிக்கையை ஆப்பிள் வெளியிடவில்லை.
ஐபோன் 14 பிளஸின் பின்புற கேமராவில் சிக்கல் கண்டறியப்பட்டுள்ளது. பின்புற கேமராவின் preview மொபைல் டிஸ்ப்ளேவில் தெரியவில்லை, இதனை சரிசெய்ய புதிய சேவை திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
ஐபோன் 14+ ஆனது 48MP பிரதான கேமராவுடன் மூன்று பின்புற லென்ஸ் அமைப்பைக் கொண்டுள்ளது.
உங்களிடம் குறைபாடுள்ள iPhone 14 Plus மாடல் இருந்தால், Apple இணையதளத்தில் அதன் வரிசை எண்ணை (Serial number) உள்ளிடுவதன் மூலம் சேவைக்கான தகுதியைச் சரிபார்க்கலாம்.
சாதனம் வேறு எந்த வகையிலும் சேதமடையவில்லை என்றால், பாதிக்கப்பட்ட சாதனத்தை சரிசெய்ய எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்று நிறுவனம் கூறுகிறது.
இந்த சேவை திட்டம் வாங்கிய நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்கு பாதிக்கப்பட்ட மொடல்களை உள்ளடக்கும் என்று ஆப்பிள் கூறுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
apple iPhone 14 Plus service program, iPhone 14 Plus Camera issue, iPhone 14 Plus camera malfunction, apple Recalls iphone 14 plus