மார்ச்சில் வெளியாகவுள்ள புதிய Apple iPhone SE3
Apple நிறுவனம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் iPhone SE 3 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Apple நிறுவனம் அடுத்த மாதம் புதிய சாதனங்களை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிமுக நிகழ்ச்சி வரும் மார்ச் 8-ஆம் திகதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல்களின்படி, Apple நிறுவனத்தின் 5-வது தலைமுறை புதிய iPod Air 5, M2 silicon processor-உடன் 13 இன்ச் MacBook Pro, 27 இன்ச் iMac Pro, Mac mini மற்றும் iPhone SE 3 ஆகிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
iPhone SE 3-ல் ஐபோன் 13 சீரிஸில் இடம்பெற்றுள்ள 5nm A15 பயோனிக் பிராசஸர், 3 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 4.7 இன்ச் எல்.சி.டி டிஸ்பிளே, 12 மெகா பிக்ஸல் கேமரா சென்சார் ஆகியவையும் இடம்பெறும் என கூறப்படுகிறது. இதன் விலை ரூ.45,000 இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்மூலம் இந்த புதிய iPhone, OnePlus 9 RT மற்றும் Samsung Galaxy S21 FE ஆகிய ஆண்ட்ராய்டு போன்களுக்கு கடும் போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.