Apple iPhone SE 4 வெளியீடு எப்போது., ரூ.50,000க்கும் குறைவான விலையில் எதிர்பார்ப்பு
Apple நிறுவனம் iPhone SE 4 மொபைலை எப்போது வெளியிடும் என்று iPhone பிரியர்கள் அனைவரும் ஆர்வமாகவும் உள்ளனர்.
இந்நிலையில், iPhone பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் ஐபோன்களை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஐபோன் ரூ.50,000க்கும் குறைவான விலையில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
iPhone SE 4 தொடர்பான சில வெளியாகியுள்ள தகவல்கள்
iPhone SE 4 2024 ஜனவரி மற்றும் மார்ச் நடுப்பகுதியில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
iPhone SE 3 அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு பிரபலமடையவில்லை. ஆனால், புதிய மாடலில் வடிவமைப்பு மற்றும் சில விடயங்கள் மாறலாம் என்று கூறப்படுகிறது.
இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், இந்த ஐபோனின் விலை ரூ.50 ஆயிரத்திற்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
iPhone SE 4-ல் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
கசிந்த தகவல்களின்படி, iPhone SE 4 வடிவமைப்பு iPhone 14 ஐப் போலவே இருக்கும் என்று தெரிவிக்கின்றன. அதாவது கீழே பொத்தான்கள் எதுவும் இல்லாமல், முழுவதுமாக திரை மட்டுமே இருக்கும் என்று நம்பப்படுகிறது.
கிடைக்கக்கூடிய தகவல்களின்படி, iPhone SE 4 வடிவமைப்பு மிகவும் நவீனமாகவும், ஸ்மார்ட்டாகவும் இருக்கும். இருப்பினும், முந்தைய ஐபோன் மாடல்களைப் போலவே, இந்த ஐபோன் SE 4-ல் மேலே Notch இருக்கும். அந்த இடத்தில Camera, Sensor மற்றும் Speaker இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும், சிறந்த வீடியோ மற்றும் கேமிங் அனுபவத்தை வழங்க இதில் OLED Display இருக்கும் என கூறப்படுகிறது. இந்த iPhone SE 4 பேட்டரி iPhone 14 பேட்டரியைப் போன்று இருக்கும்.
இந்த iPhone SE 4 எப்போது சந்தைக்கு வரும் என ஐபோன் பிரியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Apple iPhone SE 4 Updates, iPhone SE 4 Price, iPhone SE 4 specs leaked