புதிய மலிவு விலை iPhone-ஐ வெளியிடவுள்ள Apple.! டிம் குக் வெளியிட்ட தகவல்
தொழில்நுட்ப நிறுவனமான Apple பிப்ரவரி 19-ஆம் திகதி ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது
இது iPhone SE 4-ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Apple நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டிம் குக் (Tim Cook) சமூக ஊடக தளமான X-இல் "ஒரு புதிய குடும்ப உறுப்பினரை சந்திக்க தயாராகுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் ஒரு குறுகிய வீடியோவைப் பகிர்ந்துள்ளார், அதில் வெள்ளி நிற ஆப்பிள் லோகோ உள்ளது.
அவர் வேறு எதையும் குறிப்பிடப்படவில்லை, ஆனால் குடும்பத்தில் சேரும் புதிய உறுப்பினர் என்றால் அது iPhone SE 4-ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர, நிறுவனம் புதிய Power Beats Pro 2 earbuds, M4 MacBook Air, M3 iPad Air, மற்றும் 11th generation iPad ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தலாம்.
Get ready to meet the newest member of the family.
— Tim Cook (@tim_cook) February 13, 2025
Wednesday, February 19. #AppleLaunch pic.twitter.com/0ML0NfMedu
இது நிறுவனத்தின் மலிவான தொலைபேசியாக இருக்கும் மற்றும் iPhone 15-ஐ விட குறைவாக இருக்கும்.
499 டொலர்கள் விலையில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
iPhone SE 4, Apple mobiles, Apple launch iPhone SE 4, iPhone SE 4 Price