முதியவரின் உயிரைக் காப்பாற்றிய Apple Smart Watch.., எந்த மாதிரியான எச்சரிக்கை விடுத்தது?
66 வயது முதியவருக்கு உடலில் திடீரென ஏற்பட்ட சீரற்ற நிலை தொடர்பாக Apple Smart Watch எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுவாக தற்போது பலரும் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஸ்மார்ட் வாட்ச்களை அணிகின்றனர். எவ்வளவு தூரம் நடக்கிறோம், எப்படி தூங்குகிறோம், இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றை ஸ்மார்ட் வாட்ச் கணிக்கிறது. அந்தவகையில் Apple Smart Watch சிறந்ததாக கூறப்படுகிறது. பலபேரின் உயிரை Apple Smart Watch காப்பாற்றியுள்ளது.
எங்கு நடந்தது?
அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஜெஃப் ப்ரீஸ்ட் (66). இவர், எப்போதும் போலவே இயல்பாக இருந்தார். அப்போது திடீரென இவரது இதயத்துடிப்பு சீரற்ற நிலையில் இருப்பதாக Apple Smart Watch எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆனால், இவருக்கு இதயத்துடிப்பு தொடர்பான பிரச்சனைகள் இதற்கு முன்பு இல்லாததால் Apple Smart Watch-ல் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக நினைத்துள்ளார்.
இருந்தாலும், அவரது மனைவி எச்சரிக்கை செய்ததின் பேரில் அவர் மருத்துவ பரிசோதனைக்கு சென்றார். அங்கு அவருக்கு இதயம் தொடர்புடைய பிரச்சனை இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதனால், அதற்கான மருந்துகளை மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
ஆனாலும், இவருக்கு தொடர்ந்து இதயத்துடிப்பு பிரச்னை இருப்பதாக ஆப்பிள் வாட்ச் எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறது. இதனால், அவருக்கு தகுந்த மருத்துவ சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |