சார்ஜர் இல்லாமல் ஐபோன்கள் விற்பனை செய்ய தடை: முக்கிய நாடு எடுத்துள்ள அதிரடி முடிவு!
நுகர்வோருக்கு எதிரான பாரபட்சமான நடைமுறையில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபடுகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான எந்த ஆதாரமும் இல்லை என தகவல்.
சார்ஜர்கள் இல்லாமல் ஐபோனை விற்பனை செய்வதை நிறுத்துமாறு Apple Inc நிறுவனத்திற்கு பிரேசில் அரசாங்கம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தால் சந்தைக்கு தற்போது அறிமுகப்படுத்தப்படும் ஐபோன்களில் பேட்டரி சார்ஜர், ஹெட்போன், ஆகியவை இல்லாமல் உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது.
இந்தநிலையில் வாடிக்கையாளர்களுக்கு முழுமையற்ற தயாரிப்பை வழங்குவதாக தெரிவித்து பிரேசில் அரசாங்கம் செவ்வாய்கிழமை Apple நிறுவனத்தின் ஐபோன்களை விற்பனை செய்ய தடை விதித்துள்ளது.
REUTERS
மேலும் ஆப்பிள் நிறுவனத்திற்கு $2.38 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்துள்ளது, அத்துடன் ஐபோன் 12 மற்றும் புதிய மாடல்களின் விற்பனையை ரத்து செய்யவும் உத்தரவிட்டது, கூடுதலாக பவர் சார்ஜருடன் வராத அனைத்து ஐபோன் மாடலின் விற்பனையையும் நிறுத்தியது.
இதுத் தொடர்பாக பிரேசிலின் அதிகாரப்பூர்வ வர்த்தமானியில் வெளியிடப்பட்ட உத்தரவில், "நுகர்வோருக்கு எதிரான வேண்டுமென்றே பாரபட்சமான நடைமுறையில் ஐபோன் இன்றியமையாத உபகரணங்களை கொண்டிருக்கவில்லை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் நோக்கத்தில் இந்த நடைமுறை உள்ளது என்ற ஆப்பிள் நிறுவனத்தின் வாதத்தை அதிகாரிகள் நிராகரித்தனர்.
Halfpoint/Shutterstock
மேலும் சார்ஜர் இல்லாமல் ஸ்மார்ட்போனை விற்பனை செய்வதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்தனர்.
கூடுதல் செய்திகளுக்கு: தெற்கு லண்டனில் பொலிஸாரால் நடத்தப்பட்ட கார் துரத்தல்...உயிரிழந்த 20 வயது இளைஞர்!
இந்த அறிவிப்பு ஆப்பிள் இன்க் அதன் புதிய ஐபோன் மாடலை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.