தெற்கு லண்டனில் பொலிஸாரால் நடத்தப்பட்ட கார் துரத்தல்...உயிரிழந்த 20 வயது இளைஞர்!
தெற்கு லண்டனில் பொலிஸார் நடத்திய கார் துரத்ததில் 20 வயதுடைய நபர் உயிரிழப்பு.
கிர்க்ஸ்டால் கார்டன்ஸ் மற்றும் நியூ பார்க் ரோடு ஆகிய இடங்களில் தடயவியல் அதிகாரிகள் விசாரணை.
தெற்கு லண்டனில் பொலிஸார் நடத்திய கார் துரத்தலில் 20 வயதுடைய நபர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளார்.
பிரித்தானியாவின் தெற்கு லண்டன் பகுதியில் இரவு 9.51 மணியளவில் லாம்பேத் பகுதியில் சிறப்பு ஆயுதமேந்திய பொலிஸார் சந்தேகத்திற்குரிய வாகனத்தை பின்தொடர்ந்தனர்.
இந்தநிலையில் திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு ஸ்ட்ரீதம் ஹில்லில் உள்ள கிர்க்ஸ்டால் கார்டன்ஸில் துரத்தலை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சிறப்பு ஆயுதமேந்திய பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தினர்.
Sky News
இதில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில், அவருக்கு முதலுதவி அளித்து அவரை மருத்துவமனைக்கு அனுமதித்தனர், இருப்பினும் அவருக்கான மருத்துவ சேவைகள் பயனளிக்காததை தொடர்ந்து அவர் நள்ளிரவு 12.16 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து செவ்வாய்கிழமை கிர்க்ஸ்டால் கார்டன்ஸ் மற்றும் நியூ பார்க் ரோடு ஆகிய இடங்களில் தடயவியல் அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sky News
கூடுதல் செய்திகளுக்கு: மாரத்தானில் ஓடி அசத்தும் 84 வயதான பிரித்தானிய பாட்டி: உடலை பராமரிக்க உதவுவதாக கருத்து.
மேலும் உயிரிழந்தவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வருகை செய்ததை தொடர்ந்து அவர்களுக்கான ஆதரவை பொலிஸார் வழங்கி வருகின்றனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.