ஐபோன்களில் விரைவில் யூ.எஸ்.பி-சி சார்ஜிங் போர்ட்: உற்சாகத்தில் ஆப்பிள் ரசிகர்கள்
பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் தங்களது ஐபோன் மாடல்களில் யூ.எஸ்.பி-சி போர்ட்களை சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக அளவில் மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் மதிப்புமிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் அதன் பயனாளர்களுக்கு தரம் வாய்ந்த மற்றும் பாதுகாப்பான தொழில்நுட்ப வசதிகளை பல ஆண்டுகளாக வழங்கி வருகிறது.
ஆப்பிள் நிறுவனத்தை பொறுத்தவரை அதற்கென தனி இயங்கு தளம், வித்தியாசமான வசதிகள், தனித்துவமான வடிவமைப்பு என அனைத்திலும் சிறப்பாக விளங்குவதன் மூலம் தொழிநுட்ப வரிசையில் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் முதலிடத்தில் நீடித்து வருகிறது.
இந்தநிலையில் ஆப்பிள் நிறுவனம் புதிய முயற்சி ஒன்றை சோதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது தொழில் நுட்பங்களில் சார்ஜிங் மற்றும் தரவு பரிமாற்ற நோக்கங்களுக்காக USB-C போர்ட் பொருத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக ப்ளூம்பெர்க்கின் மார்க் குர்மனின் வெளியிட்ட அறிக்கையின்படி ஆப்பிள் USB-C போர்ட்களைக் கொண்ட ஐபோன்களை சோதனை செய்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையானது, ஐபோனை USB-C போர்ட்டுடன் இணைக்க திட்டமிட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனத்தின் ஆய்வாளர் மிங்-சி குவோ பரிந்துரைத்ததை அடுத்து வெளிவந்துள்ளது.
ஆனால் USB-C போர்ட் கொண்ட ஐபோனை பெற சிறிது நேரம் எடுக்கும் என தகவல் தெரியவந்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: சென்னையை திணறடித்த குஜராத் டைட்டன்ஸ்: மோசமான ஆட்டம் என ரசிகர்கள் கருத்து
குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் ஆப்பிள் ஐபோன் 15 ஐ 2023 ஆம் ஆண்டில் USB-C போர்ட்டுடன் அறிமுகப்படுத்தலாம் என தெரியவந்துள்ளது.