சென்னையை திணறடித்த குஜராத் டைட்டன்ஸ்: மோசமான ஆட்டம் என ரசிகர்கள் கருத்து
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைப்பெற்ற ஐபிஎல்-லின் 62வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
1⃣0⃣th win of the #TATAIPL 2022 for @gujarat_titans! ? ?
— IndianPremierLeague (@IPL) May 15, 2022
The @hardikpandya7-led unit beat #CSK by 7 wickets to pocket two more points. ? ? #CSKvGT
Scorecard ▶️ https://t.co/wRjV4rXBkq pic.twitter.com/ZyQ9WjgTrP
குஜராத் டைட்டன்ஸ் அணியின் அபாரமான பந்துவீச்சு மற்றும் சென்னை அணியின் வியக்கவைக்கும் நிதான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட்களை இழந்து வெறும் 133 ஓட்டங்களை மட்டுமே சேர்த்து இருந்தது.
சென்னை அணியில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 49 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 53 ஓட்டங்கள் சேர்த்து இருந்தார்.
இதனை தொடர்ந்து இரண்டாவது பேட்டிங்கில் 134 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ், 19.1 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து 137 ஓட்டங்களை பெற்று வெற்றி தன்வசமாக்கியுள்ளது.
குஜராத் அணியை பொறுத்தவரை அதிகபட்சமாக விருத்திமான் சாஹா 57 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 67 ஓட்டங்கள் சேர்த்து இருந்தார்.
பந்துவீச்சை பொறுத்தவரை குஜராத் அணி முகமது சமி 4 ஓவர்கள் பந்துவீசி 19 ஓட்டங்கள் மட்டுமே விட்டுகொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
சென்னை எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஆட்டநாயகன் விருதை விருத்திமான் சாஹா தட்டிசென்றுள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: இலங்கையில் அடுத்த இரண்டு வாரங்கள்...பிரதமர் ரணில் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு!
சென்னை அணியின் இந்த தோல்விக்கு அணிவீரர்களின் மோசமான ஆட்டமே காரணம் என சி.எஸ்.கே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.