iPhone 18 தொடரை அறிமுகம் செய்த ஆப்பிள்: அசத்தும் புதிய சிறப்பம்சங்கள் என்னென்ன?
Apple unveils Iphone 18 Pro Series, What are the Highlights: ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 18 ப்ரோ தொடர் ஸ்மார்ட்போனை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய ஸ்மார்ட்போன் தொடர்களை அறிமுகப்படுத்திய ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர நிகழ்வு புதன்கிழமை நடைபெற்ற நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 18 ப்ரோ(iPhone 18 Pro) மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்(iPhone 18 Pro Max) மாடல் ஸ்மார்ட்போன்களை ஆப்பிள் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்களானது Deep Black, Refined Silver, Glacier Blue, Burgundy ஆகிய நிறங்களில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
From iPhone Duo, iPhone 18 Pro, and iPhone 18 Pro Max to Apple Watch Series 12, Apple Watch Ultra 4, and AirPods 5… here's a look at all of the latest announcements dropping today! #AppleEvent pic.twitter.com/YvswtNEA7m
— Tim Cook (@tim_cook) September 9, 2026
ஆப்பிள் ஸ்மார்ட்போன் அறிமுக நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி(CEO) ஜான் டெர்னுஸ்(John Ternus), அறிமுகமாகும் புதிய ஐபோன்களில் மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு, சக்தி வாய்ந்த செயல்திறன் மற்றும் அதிக ஆற்றலை உள்ளடக்கிய பற்றரி மற்றும் சிறந்த கேமரா வசதிகள் ஆகியவை முன்னேற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஐபோன் 18 தொடரின் முக்கிய அம்சங்கள்
ஐபோன் 18 மாடல்களில் 2 நானோமீட்டர் செயல்முறை நோட் மூலம் உருவாக்கப்பட்ட A20 ப்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது.
அத்துடன் சிறந்த செயல்திறனை உறுதிப்படுத்தும் விதமாக 7-கோர் ஜிபியு (GPU) இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மாற்றியமைக்க கூடிய கேமரா துளை(changeable Aperture Values) அம்சம் கொண்ட அதிநவீன கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரே சார்ஜில் 45 மணி நேரம் தொடர்ச்சியாக வீடியோ ஓட கூடிய பிளேபேக் திறன் வழங்கப்பட்டுள்ளது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்

அமெரிக்காவில் ஐபோன் 18 ப்ரோவின் விலை $1,199 ஆகவும், ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் விலை $1,299 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான முன் பதிவுகள் செப்டம்பர் 12ம் திகதி தொடங்குகிறது. அத்துடன் இதன் அதிகாரப்பூர்வ விற்பனை செப்டம்பர் 18ம் திகதி முதல் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |