விபத்தில் சிக்கிய இளைஞர்.. ஆம்புலன்ஸை அழைத்த ஆப்பிள் வாட்ச்! பின்னர் நடந்தது என்ன?
சிங்கப்பூரில் விபத்தில் சிக்கிய இளைஞரின் உயிரை ஆப்பிள் வாட்ச் ஒன்று காப்பாற்றிய நிகழ்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சிங்கப்பூரில் வசித்து வருபவர் முகம்மது ஃபித்ர(24). இவர் பைக்கில் வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த வேன் திடிரென்று அவர் மேல் மோதியது.
இதில் தடுமாறி ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே மயங்கியுள்ளார். இது குறித்து அவருக்கு யாரும் உதவிக்கு வரவில்லை.
எனினும் விபத்தினால் உண்டான அதிர்வுகளால் முகமது ஃபிட்ரியின் கையில் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச்சில் இருந்து ஆம்புலன்ஸ்க்கு தகவல் சென்றுள்ளது.
அதன்மூலம் இருப்பிடத்தை அறிந்து விபத்தில் காயமடைந்த முகமது ஃபிட்ரி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். ஆப்பிள் வாட்ச்சில் அதுவும் குறிப்பாக ஆப்பிள் சிரீஸ் 4இல் அவசர பிரிவுக்கு தகவல் தெரிவிக்கும் எஸ்.ஓ.எஸ் வசதி உள்ளது.
ஏதேனும் அவசரநிலை என்றால் வாட்ச்சில் அலாரம் அடிக்கும். பின்னர் அவசர உதவிக்கு இருப்பிடத்துடன் கூடிய தகவல் அனுப்பப்படும்.
அந்தவகையில் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் விபத்தில் சிக்கியவரை சரியான நேரத்திற்கு மருத்துவமனையில் சேர்க்க உதவி செய்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.