இந்தியாவில் இனி ஐபோன் தொலைந்தால் காப்பீடு - புதிய சலுகையை வழங்கும் ஆப்பிள்
இந்தியாவில், ஆப்பிள் கேர் பிளஸ் திட்டத்தில் புதிய அம்சங்களை ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆப்பிள் கேர் பிளஸ்

ஆப்பிள் தனது காப்பீடு திட்டமான ஆப்பிள் கேர் பிளஸ்ஸில்(AppleCare+), இந்திய பயனர்களுக்கு 2 கூடுதல் அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
முன்னதாக, இதில் ஆண்டு சந்தா மட்டும் இருந்த நிலையில், தற்போது மாதம் ரூ.799 க்கான மாத சந்தாவை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும், இந்த காப்பீடு திட்டத்தில் தற்போது ஐபோன் திருட்டு மற்றும் இழப்பை இணைத்துள்ளது.
[GNO74
இந்த திட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் 2 திருட்டு அல்லது இழப்புகளை உள்ளடக்கியது. அதனுடன், பேட்டரி மாற்றுதல், வரம்பற்ற தற்செயலான சேத பழுதுபார்ப்புகள் மற்றும் 24 மணி நேர முன்னுரிமை ஆதரவு போன்ற வழக்கமான AppleCare Plus நன்மைகளையும் பயனர்கள் பெறுகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |