மரணத்தை நெருங்கிவிட்டேன்... புடினின் கடும் விமர்சகரான ஜனாதிபதி ஒருவர் சிறையில் தவிப்பு
சிறையில் விஷம் அளிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டும் முன்னாள் ஜார்ஜிய ஜனாதிபதி மிகைல் சாகாஷ்விலி, தாம் மரணத்தை நெருங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
புடின் தமது வாழ்நாள் எதிரி
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை தமது வாழ்நாள் எதிரியாக பாவிக்கும் முன்னாள் ஜார்ஜிய ஜனாதிபதி மிகைல் சாகாஷ்விலியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவே கூறப்படுகிறது.
@EPA
மட்டுமின்றி, விளாடிமிர் புடினை கடுமையாக விமர்சித்தவர்கள் பெரும்பாலானோர் தற்போது உயிருடன் இல்லை அல்லது, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அச்சம் காரணமாகவே, தாம் மரணத்தை நெருங்கிவிட்டதாக மிகைல் சாகாஷ்விலி குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மிகைல் சாகாஷ்விலி, கடந்த 2018ல் இருந்தே சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
ஆனால், நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பில் இருந்தவர் சிறையில் மரணமடைவது முறையல்ல எனவும், அவரது தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் என ஜார்ஜிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
@reuters
மிகைல் சாகாஷ்விலிக்கு விஷம்
இதனிடையே, 2022 ஆண்டு இறுதியில் மிகைல் சாகாஷ்விலிக்கு விஷம் அளிக்கப்பட்டுள்ளது என குடும்பத்தினர் அச்சம் தெரிவித்துள்ளனர். அவரது ரத்தத்தில் உலோகங்கள் மற்றும் ரசாயனம் கலந்திருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதை அடுத்தே குடும்பத்தினர் கவலை தெரிவித்திருந்தனர்.
ஆனால், தேவைக்கேற்ற உணவுகளை உட்கொள்ள மறுப்பதாலையே, அவரது நிலை மோசமடைவதாகவும், விஷம் அளிக்கப்பட்டதாக கூறுவது அபாண்டம் எனவும் தற்போதைய அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.
@getty
தமக்கு அளிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு எதிராக தொடர்ந்து 50 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டவர் மிகைல் சாகாஷ்விலி. சமீப வாரங்களில் தற்போதைய ஜார்ஜிய அரசாங்கம் ரஷ்ய ஆதரவு சட்டங்களை இயற்றியுள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுக்கு ஆதரவாக மிகைல் சாகாஷ்விலி கடிதம் ஒன்றும் வெளியிட்டிருந்தார்.
கலவரமும் வெடித்தது
புதிய சட்டத்தின்படி, அரசு சாரா குழுக்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் 20 சவீதத்திற்கும் அதிகமாக வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் என்றால், அந்த நிறுவனங்கள் குறிவைக்கப்படும்.
இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியதுடன், கலவரமும் வெடித்தது. கடந்த வாரம் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியும், ஜார்ஜிய முன்னாள் ஜனாதிபதி மிகைல் சாகாஷ்விலியை விடுவிக்க கோரிக்கை விடுத்திருந்தார்.
மட்டுமின்றி, 2008ல் ஜார்ஜியா மீது ரஷ்யா படையெடுத்ததுடன், சாகாஷ்விலியை தூக்கிலிட வேண்டும் என அப்போது விளாடிமிர் புடின் சபதமேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.