123 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்! ஒப்புதல் அளித்த ஒலிம்பிக் அமைப்பு
அமெரிக்காவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் போட்டியையும் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் தொடர்
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒலிம்பிக் தொடர் 1896ஆம் ஏதென்ஸில் முதலில் தொடங்கியது.
பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் இதில் இருந்தாலும் கிரிக்கெட் மட்டும் (1900ஆம் ஆண்டுக்கு பின்) சேர்க்கப்படாமல் இருந்தது.
இதனால் பல ஆண்டுகளாக கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை மட்டும் முன்வைக்கப்பட்டு வந்தது.
கிரிக்கெட்டுக்கு ஒப்புதல்
இந்த நிலையில் மும்பையில் நடந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் நிர்வாகக் குழு கூட்டத்தில், லாஸ் ஏஞ்சல்ஸில் (அமெரிக்கா) 2028ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் 5 போட்டிகளை சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதில் கிரிக்கெட்டும் இடம்பெற்றுள்ளது. பேஸ்பால் (Baseball), பிளாக் கால்பந்து, ஸ்குவாஷ், லாக்ரோஸ் (சிக்ஸஸ்) ஆகிய போட்டிகள் ஆகும்.
இதன்மூலம் 123 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெற்றுள்ளது.
AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |