மின்சார வாகனமாக மாறும் பெட்ரோல் வாகனம் - 2 மணி நேரத்தில் மாற்றி தரும் நிறுவனம்
ஏஆர்4 டெக் நிறுவனம் பெட்ரோலில் இயங்கும் இருசக்கர வாகனத்தை மின்சாரத்தில் இயங்கும் வாகனமாக மாற்றி தருகிறது.
மின்சார வாகனங்கள்
அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக, மின்சார வாகன பயன்பாட்டை அரசு ஊக்குவித்து வருகிறது. தற்போது இரு சக்கர வாகனம் தொடங்கி கார், பேருந்துகள் என அனைத்திலும் மின்சார வாகனங்கள் சந்தைக்கு வந்து விட்டது.
அதே போல், பெட்ரோலில் இயங்கும் இருசக்கர மின்சார வாகனத்தை, மின்சார வாகனமாக மாற்றும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் சிவசங்கரி.
சிவசங்கரி
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சிவசங்கரி என்ற பெண், அந்த குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி ஆவார்.
கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்த இவர், 2019 ஆம் ஆண்டு கோயம்புத்தூருக்கு இடம்பெயர்ந்து, அங்கு மின்சார இரு சக்கர வாகனங்களுக்கு மோட்டர்களை தயாரித்து வழங்கும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார்.
அந்த நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவத்தை வைத்து, பெட்ரோலில் இயங்கும் இருசக்கர வாகனங்களை மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களாக மாற்றுவது தொடர்பான ஆய்வில் சக ஊழியருடன் இணைந்து ஈடுபட்டார்.
3 ஆண்டுகள் warranty
இந்த ஆய்வுகள், பெட்ரோலில் இயங்கும் இருசக்கர வாகனங்களின் என்ஜின்களை மின்சாரத்தில் இயங்கும் வாகன என்ஜின்களாக மாற்றும் ஏஆர்4 டெக் (AR4 Tech) நிறுவனத்தை தொடங்குவதற்கு அடிப்படையாக அமைந்தது.
இந்த நிறுவனம் 2 மணி நேரத்தில் பெட்ரோல் வாகனத்தின் என்ஜின்களை மின்சாரத்தில் இயங்கும் வாகனத்தின் என்ஜின்களாக மாற்றித்தருகிறார்கள்.
இதற்காக ரூ.39,900 கட்டணம் வசூலிக்கும் இவர்கள், இந்த வாகனங்களுக்கு 3 ஆண்டுகள் warranty தருகிறார்கள். மின்சார வாகனமாக மாற்றப்பட்ட பின்னர் இந்த வாகனங்கள் மணிக்கு 50 கிமீ வேகத்தில் இயங்கும் திறன் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |