கசாப்பு கடையா வைத்திருக்கேன்? மூஞ்சிய பாரு - செல்ல பெயருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த ரியாக்சன்
பெரிய பாய் என்ற பெயரில் தன்னை அழைப்பது பிடிக்கவில்லை என ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான்
இந்தியா சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக உள்ளவர் ஏ.ஆர்.ரஹ்மான். தனது இசை மூலம் 2 ஆஸ்கார் விருது வாங்கி இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்.
ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது லாகூர் 1947, தக் லைஃப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும், ஜீனி, மூன் வாக், தனுஷ்56 மற்றும் பல்வேறு இந்தி படங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
பெரிய பாய்
சமீபத்தில், தொகுப்பாளர் திவ்யதர்ஷினிக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில், பெரிய பாய் பாட்டுக்கு யார் நோ சொல்வா என திவ்யதர்ஷினி கூறுவார்.
அப்புறம் என்னப்பா இனிமே யாரும் பெரிய பாய்-னு கூப்பிடாதீங்க ✌️ pic.twitter.com/pR4IEo8zaa
— Nandhan Talkz ✨ (@Nandhan_Talkz) May 20, 2025
அதற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் சிரித்துக்கொண்டே 'என்னது பெரிய பாய்யா? என்று கேட்பார். என்ன சார் உங்களுக்கு தெரியாதா? உங்களோட செல்லப்பேயரே அதுதான் என தொகுப்பாளர் திவ்யதர்ஷினி கூறுவார்.
அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், வேணாம் எனக்கு பிடிக்கல. பெரிய பாய், சின்ன பாய்னு, என்ன கசாப்பு கடையா வைத்திருக்கேன்? மூஞ்சிய பாரு" என சிரித்துக்கொண்டே பதிலளிப்பார்.
கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்கள் ஏ.ஆர்.ரஹ்மானை பெரிய பாய் என்றும், யுவன் ஷங்கர் ராஜாவை சின்ன பாய் என்றும் அழைத்து வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |