10ம் வகுப்பில் மகன் எடுத்த மதிப்பெண்கள்... அறந்தாங்கி நிஷா வெளியிட்ட காணொளி
நடிகை அறந்தாங்கி நிஷாவின் மகன் பத்தாம்வகுப்பில் எடுத்த மதிப்பெண் விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
அறந்தாங்கி நிஷா
சின்னத்திரையில் ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் அறந்தாங்கி நிஷா. இவரது மகன் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தனது கலகலப்பான பேச்சால் ரசிகர்களிடையே பிரபலமானதுடன், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு விளையாடினார்.
இந்நிலையில் இவரது மகன் 10ம் வகுப்பில் 321 மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்றிருப்பதாகவும், மற்ற பெற்றோரை போன்று தானும் பயத்தில் இருந்ததாகவும், மகன் எடுத்துள்ள மதிப்பெண் தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறியுள்ளார்.

எந்த மதிப்பெண் கிடைத்தாலும், அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு அதுஒரு படிகட்டு தான், தேர்வு மட்டுமே உங்களது வாழ்க்கையினை தீர்மானிக்கும் என்று நினைக்கவேண்டாம்.
10ம் வகுப்பில் குறைவான மதிப்பெண் எடுத்திருந்தால், 12ம் வகுப்பில் இன்னும் அதிகமாக எடுக்க முயற்சி செய்யுங்கள் என்றும், மதிப்பெண் குறைந்துவிட்டதால் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைக்கக்கூடாது.

மேலும் வாழ்க்கையில் திறமை இருந்தால் அடுத்த கட்டத்திற்கு மிகவும் எளிமையாக சென்றுவிடலாம். ஆதலால் எக்காரணத்தினைக் கொண்டும் மனம் உடையாமலும், கவலைப்படாமலும் இருக்க மாணவர்களுக்கு தைரியம் கொடுத்துள்ளார்.