தித்திக்கும் சுவையில் அரவண பாயாசம்.., எப்படி செய்வது?
அரவண பாயாசம் என்பது கேரளாவின் சிவப்பு அரிசி மற்றும் வெல்லம் கொண்டு செய்யப்படும் ஒரு இனிப்பு பாயாசம் ஆகும்.
இது சபரிமலை ஐயப்பன் கோவிலின் மிகவும் பிரசித்தி பெற்ற பிரசாதங்களில் ஒன்றாகும்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் அரவண பாயாசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கருப்பு வெல்லம்- 1 கப்
- நெய்- 1 கப்
- தேங்காய் துண்டுகள்- 5 ஸ்பூன்
- முந்திரி- 10
- மட்டை அரிசி- 1 கப்
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
- பச்சை கற்பூரம்- 1 சிட்டிகை
- சுக்கு பொடி- ½ ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து கரைந்ததும் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
பின் மற்றொரு பாத்திரத்தில் கழுவிய மட்டை அரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.

அரிசி வெந்ததும் இதில் கரைத்து வைத்த வெல்லம் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
அடுத்து இது நன்கு கொதித்து கெட்டியாகி வந்ததும் இதில் ஏலக்காய் தூள், சுக்கு பொடி, பச்சை கற்பூரம் நெய் சேர்த்து கிளறவும்.
இறுதியாக இதில் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் தேங்காய் துண்டுகள் சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான அரவண பாயாசம் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |