இந்தியாவின் இளவயது பில்லியனரான சென்னையில் பிறந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ்
2025 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலை Hurun india அமைப்பு வெளியிட்டுள்ளது.
முதலிடத்தில் அம்பானி
இதில், ரூ.9.55 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பம் முதலிடத்தில் உள்ளது.
அதானி குழும தலைவர் கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பம் ரூ.8.14 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 2வது இடத்தில் உள்ளது.
3வது இடத்தில், ரூ.2.84 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் HCL தலைவர் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா மற்றும் அவரது குடும்பம் உள்ளது.
இவரே இந்தியாவின் பணக்கார பெண்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்த HCL நிறுவனர் ஷிவ் நாடாரின் ஒரே மகள் ஆவார்.
சீரம் நிறுவன தலைவர் சைரஸ் பூனவல்லா மற்றும் அவரது குடும்பம் ரூ.2.46 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 4வது இடத்திலும், குமார் மங்கலம் பிர்லா குடும்பம் ரூ.2.32 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 5வது இடத்திலும் உள்ளது.
அரவிந்த் ஸ்ரீனிவாஸ்
ரூ.21,190 கோடி சொத்து மதிப்புடன் இந்தியாவின் இள வயது பில்லியனர் பட்டியலில், பெர்ப்ளெக்ஸிட்டியின் இணை நிறுவனரான 31 வயதான அரவிந்த் ஸ்ரீனிவாஸ் முதலிடத்தில் உள்ளார். இவர் சென்னையில் பிறந்தவர் ஆவார்.
இந்த பில்லியனர் பட்டியலில் இளவயது உடையவராக, ஜெப்டோவின் இணை நிறுவனர் 22 வயதான கைவல்யா வோஹ்ரா உள்ளார். இவர், 4,480 கோடி சொத்து மதிப்பு வைத்துள்ளார்.
ரூ.12,490 கோடி சொத்துமதிப்புடன் நடிகர் ஷாருக்கான் முதல் முதலாக பில்லியனர் பட்டியலில் இணைந்துள்ளார்.
இதன் மூலம் டெய்லர் ஸ்விப்ட், டாம் க்ரூஸ் ஆகியோரை பின்னுக்கு தள்ளி உலகின் பணக்கார நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |