ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்பவர்களா நீங்கள்? அப்போ கட்டாயம் இவற்றை கடைபிடியுங்க
ஜிம்முக்கு சென்று பயிற்சி செய்பவர்களுக்கும் ஒரு சில வழிகாட்டல்கள் உள்ளன. அவற்றை மறக்கமால் செய்து வருவது நல்லது. தற்போது அவற்றை தெரிந்து கொள்வோம்
உடற்பயிற்சிக்கு முன்
உடற்பயிற்சிக்கு முன்னர் சாப்பிடவேண்டிய உணவுகளின் பட்டியலில் ஆப்பிள், ஆரஞ்சு, பேரிக்காய், பப்பாளி, பீனட் பட்டர் தடவிய முழு தானிய ரொட்டி, ஓட்ஸ், தயிர், கிரீன் டீ, நட்ஸ் போன்றவை கட்டாயம் இருக்க வேண்டும்.
எப்போது சாப்பிடலாம் ?
உடற்பயிற்சி செய்யப் போவதற்கு, 40 முதல் 60 நிமிடங்களுக்கு முன்னர் சாப்பிட்டுவிட வேண்டும்.
உடற்பயிற்சிக்குப் பின்
உடற்பயிற்சிக்குப் பின்னரும் சாப்பிட வேண்டும். நீங்கள் உட்கொள்ளும் உணவுகள் அனைத்தும் எளிதில் விழுங்கக்கூடிய, அதிகம் மென்று சாப்பிட அவசியமில்லாத உணவுகளாக இருக்க வேண்டும்.
முக்கிய குறிப்பு
பொதுவாக, உடற்பயிற்சி செய்து முடித்ததும் பலரும் எனர்ஜிக்காக எலெக்ட்ரோலைட்ஸ், புரோட்டீன் டிரிங்ஸ் போன்றவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
 அவற்றுக்குப் பதிலாக தண்ணீர், இளநீர், வாழைப்பழம் போன்றவற்றை உட்கொள்ளலாம்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        