இரவு 9 மணிக்கு மேல் சாப்பிடுபவர்களா நீங்கள்? இந்த பிரச்சினை வருமாம்! உஷாரா இருங்க.
இன்றைய காலத்தில் உயிரை கொல்லும் நோய்களுள் முதலிடத்தில் புற்றுநோய் உள்ளது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது.
புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதில் நமது வாழ்க்கை முறை, குறிப்பாக நமது உணவுமுறை, முக்கிய பங்காற்றுகிறது.
இந்நிலையில் இரவு 9 மணிக்குப் பிறகு தொடர்ந்து சாப்பிடுபவர்கள் மற்றும் சாப்பிட்ட பிறகு இரண்டு மணி நேரம் கூட நேரம் எடுத்துக்கொள்ளாமல் உடனே படுக்கைக்கு செல்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான அபாயம் 25 சதவீதம் அதிகம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
காரணம் என்ன?
உங்கள் உடல் கடிகாரம் சரியாகச் செயல்பட்டு இரவு 9 மணி அல்லது அதற்குப் பிறகு, சரியாக உறக்கம் வர வேண்டும்.
அந்த நேரத்திற்கும் பிறகு உடல் சுறுசுறுப்பாக செயல்படுவது சர்க்காடியன் தாளத்தை சீர்குலைத்து தூக்கம், பசி மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும்.
ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?
தாமதமாக உணவு எடுத்துக்கொள்ளும் ஆண், பெண் இருவருக்குமே புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு 25 சதவீதம் அதிகம் உள்ளது.
உணவு உண்ணும் நேரம் புற்றுநோயின் அபாயத்தை ஏன் பாதிக்கிறது என்பதைத் தீர்மானிக்க கூடுதல் ஆராய்ச்சி தேவைப்பட்டாலும், சில சான்றுகள் இது சீர்குலைந்த தூக்க முறை காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றன.
தூக்க முறைகளில் மாற்றம் இருக்கும் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகின்றது.
முடிவு
எனவே இவற்றை தவிர்க்க இரவு நேரத்தில் சரியான நேரத்தில் உண்ணுவது சிறந்ததாகும்.