புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள்! கட்டாயம் சாப்பிடுங்க
உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நோய்களில் முதன்மையானது புற்றுநோய், நம் உடலில் ஆரோக்கியமான செல்களை அழித்து புற்றுநோய் செல்கள் பல்கிப்பெருகுகிறது.
இதன் ஆரம்ப கட்ட அறிகுறிகளை கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சைகள் எடுத்துக் கொண்டால் ஆபத்தான நிலையிலிருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவில், நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மஞ்சளில் நிறைந்துள்ள பாலிஃபீனால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தாமதப்படுத்துகிறது, மேலும் குர்க்குமின் என்ற பொருள் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது, இதுதவிர புற்றுநோயால் ஏற்படும் புண்களை ஆற்றும் சக்தியும் மஞ்சளுக்கு உண்டு.
தக்காளியில் உள்ள லைக்கோபீன் பொருளில் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் உள்ளது, எனவே உணவில் தக்காளியை அடிக்கடி சேர்த்து வந்தால் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலை பெறலாம்.
ஆய்வின்படி ப்ரோக்கோலியில் உள்ள சல்போராபேன் என்ற பொருள், பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோயை 50 சதவிகிதம் குறைக்கும் தன்மை கொண்டது என நிரூபிக்கப்பட்டுள்ளது, பெருங்குடல் புற்றுநோயை தவிர்க்கும் பண்புகளும் இதில் நிறைந்துள்ளன.
இஞ்சியின் காரத் தன்மைக்குக் காரணமான ‘ஜிஞ்சரால்’ புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, அழிக்கிறது. குறிப்பாக, ஆண்களுக்கு ஏற்படும் ப்ராஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கிறது.
முளைகட்டிய பயறுகளில் நிறைந்துள்ள சல்ஃபோராபேன் என்ற ரசாயனம் புற்றுநோய் செல்களை அழிக்கிறது. பயறாகச் சாப்பிடுவதைக் காட்டிலும், முளைகட்டி பயறாகச் சாப்பிடும்போது, அதில் சல்ஃபோராபேன் அளவு 50 சதவிகிதம் அதிகரிக்கிறதாம்.
கேரட் நம் கண் பார்வைக்கு நல்லது என்று தெரியும், ஆனால் உண்மையில் கேரட்டில் புற்றுநோயை தடுக்கும் ஆற்றலும் காணப்படுகிறது, இதிலுள்ள பீட்டாகரோட்டின் எல்லா வகைப் புற்றுநோய்களின் தீவிரத்தையும் குறைக்கிறது.
மிளகில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் சத்துக்கள் மற்றும் தயமின், ரிபோஃபிளேவின், நியாசின் போன்ற சத்துக்கள் உள்ளன. மிளகில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
பட்டை புற்றுநோய் கட்டிகள் பரவுவதை தடுத்து நிறுத்துகிறது. குறிப்பாக பட்டை யிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் தலை மற்றும் கழுத்தில் வளரும் புற்றுநோய் செல்களை குறைக்கின்றதாம்.