நீங்கள் இரவில் தாமதாமாக சாப்பிடுபவரா? ஜாக்கிரதையாக இருங்க!
பொதுவாக ஆரோக்கியத்தை பாதுகாக்க உணவு என்பது முக்கியமானது ஒன்றாகும்.
அதிலும் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவதும் முக்கியமானது.
நிறைய பேர் 9 மணிக்குள்ளோ, அதற்கு பிறகோ தான் இரவு உணவை சாப்பிடுகிறார்கள். 10 மணி, 11 மணியை கடந்த பிறகு சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள்.
அப்படி சாப்பிடுவது செரிமான மண்டலத்திற்கு இடையூறு ஏற்படுத்தும். அந்த நிலை தொடர்ந்தால், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.
இல்லாவிடின் இது பின்னவில் பெரிய உடல்நல கோளறை ஏற்படுத்திவிடும்.
எனவே சரியான நேரத்தில் இரவு உணவை எடுத்து கொள்வதே நல்லது. அந்தவகையில் எந்த நேரத்தில் இரவு உணவை எடுத்து கொள்ளலாம் என்று தாமதமாக சாப்பிடுவதனால் கிடைக்கும் பக்கவிளைவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
என்ன நேரத்தில் சாப்பிடுவது சிறந்தது?
- இரவு 7 மணிக்குள் சாப்பிடுவதுதான் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.
- இரவு 7 மணிக்குள் சாப்பிட்டுவிட்டு 9 மணிக்கு மேல் தூங்க செல்வது சிறந்தது. இது நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும் செய்யும்.
- காலை உணவுக்கும், இரவு உணவுக்கும் இடையே போதுமான இடைவெளி இருப்பது உடல் எடை குறைவதற்கும் உதவும்.
- இரவு 7 மணிக்குள் சாப்பிடும்போது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு எரிக்கப்படும்.
- இரவு உணவிற்கும், மறுநாள் காலை உணவிற்கும் இடையே 10 மணி நேர இடைவெளி இருப்பது நல்லது.
என்ன பக்கவிளைவுகள் ஏற்படும்?
- இரவில் தாமதமாக சாப்பிடும்போது உணவு நன்றாக ஜீரணமாகாது.
- தாமதமாக சாப்பிட்டால் அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
- இரவில் தாமதமாக சாப்பிட்டுவிட்டு உடனே தூங்க செல்லும்போது அது தூக்க சுழற்சிக்கும் இடையூறு விளைவிக்கும்.
- இரவு உணவை தாமதமாக சாப்பிடும்போது கூடுதல் கலோரிகள் எடுத்து கொள்ளும்.
இதனால் இது செரிமானம் ஆகுவதற்கு நேரமில்லாமல் போய்விடும்.
- இரவு சாப்பாட்டின் அளவு அதிகமானால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவதற்கும் வழிவகுத்துவிடும்.
- நீரிழிவு, தைராய்டு, இதயம் சார்ந்த நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் இரவு உணவை குறைவாக சாப்பிடுங்கள்.