ஜேர்மனி ஜாம்பவானின் சாதனையை முறியடித்த மெஸ்ஸி: உலகக்கோப்பையில் அர்ஜென்டினாவும் சாதனை
12 FIFA உலகக்கிண்ணப் போட்டிகளில் 2 கோல்கள் அல்லது அதற்கு மேற்பட்ட கோல்கள் அடித்து அர்ஜென்டினா சாதனை படைத்தது.
அர்ஜென்டினா சாதனை
FIFA உலகக்கிண்ணத் தொடரின் காலியிறுதிப் போட்டியில், அர்ஜென்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் 3 கோல்கள் அடித்ததன் மூலம் உருகுவே அணியின் 72 ஆண்டுகால சாதனையை அர்ஜென்டினா முறியடித்தது.
அதாவது, 11 ஃபிபா உலகக்கிண்ணப் போட்டிகளில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட கோல்கள் அடித்த அணி என்ற சாதனையை இதுவரை உருகுவே வைத்திருந்தது.
மெஸ்ஸி முதல் வீரர்
1930ஆம் ஆண்டு முதல் 1954ஆம் ஆண்டு வரையில் உருகுவே இந்த சாதனையை செய்திருந்தது; அதனை அர்ஜென்டினா அணி முறியடித்துள்ளது.
மேலும், நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) FIFA உலகக்கிண்ணப் போட்டியில் 15 நாக்-அவுட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இதற்கு முன்பு, ஜேர்மனி அணியின் மிரோஸ்லாவ் க்ளோஸ் (Miroslav Klose) 14 போட்டிகளில் விளையாடியது சாதனையாக இருந்தது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |