எல் நினோவால் நீர் மட்டத்தில் திடீர் உயர்வு... இகுவாசு அருவியை மூடிய அர்ஜென்டினா
Argentina temporarily closes Iguazu Falls: அர்ஜென்டினா இகுவாசு நீர்வீழ்ச்சியை தற்காலிகமாக மூடியது.
மிகவும் தீவிரமான எல் நினோ வானிலை அமைப்பால் ஏற்பட்ட பலத்த மழையின் காரணமாக, புகழ்பெற்ற இகுவாசு அருவிக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்வதை அர்ஜென்டினா அதிகாரிகள் தடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆறு மடங்கு
வேகமாக உயர்ந்து வரும் நீர்மட்டத்தால் ஆற்றின் கரைகள் உடைந்துவிடும் என்ற அச்சங்களுக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

திங்களன்று இகுவாசு ஆற்றின் நீர்வரத்து, அதன் சராசரி அளவை விட ஆறு மடங்குக்கும் அதிகமாக, வினாடிக்கு 12,000 கன மீற்றரைத் தாண்டியபோது, தேசிய பூங்கா அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே, ஆற்றின் நீரோட்டம் படிப்படியாகக் குறைந்து வருவதைக் குறிப்பிட்டு, அப்பகுதி செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பு பின்னர் தெரிவித்தினர்.
ஆனால், இகுவாசு தேசியப் பூங்காவின் இயக்குநரான ஜோஸ் மரியா ஹெர்வாஸ் தெரிவிக்கையில், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், இகுவாசு ஆற்றின் மேல்பகுதியில் உள்ள அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறையாததாலும் சுற்றுலாப் பயணிகளுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரமிக்க வைக்கும் அருவிகளில் ஒன்றாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட இகுவாசு அருவி, அர்ஜென்டினா மற்றும் பிரேசில் எல்லையில் அமைந்துள்ளது மற்றும் சுமார் 2,700 மீற்றர் நீளம் கொண்டது.
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில், முந்தைய எல் நினோ சுழற்சியால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, அர்ஜென்டினா அதிகாரிகள் எல்லையின் தங்கள் பக்கத்தில் உள்ள பூங்காவை மூடினர்.
மேலும் தீவிரமாக்குவதாக
காற்று மற்றும் மழைப்பொழிவில் உலகளாவிய மாற்றங்களையும், சீரற்ற வானிலை நிலவுவதையும் ஏற்படுத்தும் 2026-2027 எல் நினோ, இதுவரை பதிவு செய்யப்பட்டவற்றிலேயே மிகப்பெரியதாக நிச்சயம் இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், மனித நடவடிக்கைகளால் ஏற்படும் புவி வெப்பமடைதல் எல் நினோ நிகழ்வுகளை மேலும் தீவிரமாக்குவதாகவும் விஞ்ஞானிகள் தற்போது கருதுகின்றனர்.

எல் நினோ பூமத்திய ரேகை பசிபிக் பகுதியில் தொடங்குகிறது, அங்கு காற்றின் திசை மாற்றங்களால் கடல்களில் இருந்து பெருமளவு வெப்பம் வெளியேறி வளிமண்டலத்தை வெப்பப்படுத்துகிறது.
மேலும் இலையுதிர் காலத்தில் வளரத் தொடங்கி டிசம்பரில் உச்சத்தை அடைகிறது; எனினும், இதன் தாக்கம் அடுத்த ஆண்டு வரையிலும் நீடிக்க உள்ளது.